சென்னை ஏர்போர்ட்டில் சுற்றித் திரிந்த நபர்.. பேக்கை திறந்து பார்த்தால் ஷாக்.. 11 கோடிக்கு ஹெராயின்!
சென்னை: சென்னையில் ரூ. 11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கத்தாரில் இருந்து வந்த இளைஞர் சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக போலீசார் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனைகளில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் சென்னைக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்துள்ளார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரது பேக்கை சோதனை செய்தனர். அப்போது 11 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 11 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த சுங்கத்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருளுடன் சென்னை ஏர்ப்போர்ட்டில் சிக்கிய இளைஞர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாரத் வசிட்டா என்பது தெரிய வந்துள்ளது.
அதைத்தொடர்ந்து அந்த நபரிடம் போதைப்பொருள் யாருக்காக கடத்தி வரப்பட்டது? எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? இதற்கு யார் தலைமை என்பது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications