திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தடை: ஹைகோர்ட்
சென்னை: திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை மிக அருகில் இருப்பதால் திருவேற்காடு மாரியம்மன் கோவிலுக்கு சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் சென்று வருகிறார்கள்.

இவ்வாறு திருவேற்காடு கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணத்தோடு, நுழைவு கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
நகராட்சி எல்லைக்குள் நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதிகள் உள்ள நிலையில், திருவேற்காடு கோவிலுக்கு செல்வதற்கான வாகன நுழைவு கட்டணத்தை மேலும் 3 ஆண்டுகள் வசூலிப்பதற்கான டெண்டரையும் கடந்த பிப்ரவரி13 ம் தேதி திருவேற்காடு நகராட்சி ஆணையர் வெளியிட்டிருந்தார்.
நுழைவு கட்டணம் வசூலிக்க நகராட்சி ஆணையர் பிறப்பித்த அறிவிப்பாணை ரத்து செய்து, நுழைவு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என பெடரேஷன் ஆஃப் கன்சூயூமர் ஆர்கனைசேஷன் என்ற அமைப்பின் பொதுசெயலாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, நுழைவுக் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு தொடர்பாக அட்மிஷன் வாட்டர் சப்ளை டிபார்ட்மென்ட் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஏப்ரல் 1 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications