அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேட்பு மனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்களை மறைக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த வாக்காளர் விக்னேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களை தற்போது ஒப்பிடும்போது, சொத்துகள் அதிக அளவில் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை அவர் தாக்கல் செய்யவில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

'முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்து விவரங்களின் உண்மைத்தன்மை மறைக்கப்பட்டதா? என வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' எனவும அவர் தமது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கி அமர்வு, ஏற்கனவே தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. அதனால், தற்போது வேட்புமனுவில் தெரிவித்த சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டனி, நாதக, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications