மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் கல்லூரி! இந்துக்களுக்கு மட்டுமே பணி.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிதியில் கொளத்தூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி தொடங்க இந்து சமய அறநிலையதுறை முடிவு செய்தது.

அந்த கல்லூரிக்கு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களை தேர்வு செய்ய நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து கடந்த 2021ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், இந்து மதத்தை சர்ந்தவர்கள் மட்டுமே கல்லூரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்தும், இந்த அறிவிப்பானையை ரத்து செய்யக் கோரியும் சுகைல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி விவேக் குமார் சிங் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி கல்வி நிறுவனம்தான், மத நிறுவனம் அல்ல என்பதால், மத அடிப்படையில் எந்த பணி நியமனங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும், எனவே தன்னை நேர்முக தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.
அறநிலைய தரப்பில், இந்து அறிநிலைய துறை சட்டப்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில் இருந்து கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதால் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி மத நிறுவனம்தான் என வாதம் வைக்கப்பட்டது.
மேலும் கல்லூரியை நடத்த அரசிடம் இருந்து எந்த வித நிதியும் பெறவில்லை என்றும் இது சுயநிதி கல்லூரி என்பதால் பணி நியமனங்களில் இந்து மதத்தை சார்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோவில் நிதியில் இருந்து நடத்தப்படும் சுயநிதி கல்லூரி என்பதால், இந்து அறநிலையத் துறை சட்டப்படி, இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே கல்லூரி பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications