இந்தி பிரச்சனை- பகிரப்படும் உ.பி அமைச்சரின் பழைய பேட்டி! தனிநாடு கோரி விசிக வன்னி அரசு பகீர் பதில்!
சென்னை: இந்தியை கட்டாயம் கற்க வேண்டும்; இல்லையென்றால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் முன்னர் பேசிய பேச்சு இப்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சஞ்சய் நிஷாத்தின் பழைய கருத்தை இப்போது பகிர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக் குழு தமது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கியது. அமித்ஷா குழுவானது இந்தி மொழி தொடர்பாக அளித்துள்ள பரிந்துரைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பரிந்துரைகளில், அனைத்து தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாகவும் இதர பயன்பாடுகளுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும்; ஆங்கில மொழியை பயன்படுத்துவது ஆப்ஷனலாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் இந்தி
ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா விதியாலயாக்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயீற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிறது அமித்ஷா குழுவின் பரிந்துரை. அதேபோல், வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிறது இக்குழு பரிந்துரை. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டுமாம்.

நீதித்துறையில் இந்தி
இந்தி பேசும் மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் இந்தி இடம்பெற வேண்டும்; அரசியல் சாசன தேவை ஏற்பட்ட்டால் மட்டுமே ஆங்கில மொழி பெயர்ப்பை பயன்படுத்த வேண்டும்; விளம்பரங்கள் அனைத்தும் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும்; ஆங்கில விளம்பரங்கள் சிறியதாகத்தான் இருக்க வேண்டும் எனவும் அமித்ஷா குழு பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்திலும், அமைச்சரவை இலாகாக்கள் அனைத்திலும் கடிதங்கள், பேக்ஸ்கள், இ மெயில்கள் இந்தியில்தான் இருக்க வேண்டும்; அலுவலக பயன்பாட்டுக்கு எளிதான இந்தி பயன்படுத்த வேண்டும். மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தியில் இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது அமித்ஷா குழு. இந்தப் பரிந்துரைகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

உ.பி. அமைச்சரின் பழைய பேட்டி
இதனிடையே நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும்; இல்லையெனில் நீங்கள் வெளிநாட்டவராக கருதப்படுவீர்கள் இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி எங்காவது செல்லுங்கள் என சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் கூறியிருந்தார். இது அப்போது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தற்போது சஞ்சய் நிஷாத் கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

தனி தமிழ்நாடு கோரும் விசிக
சஞ்சய் நிஷாத்தின் பழைய கருத்தை இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசும் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், இந்தி தெரியவில்லை என்றால் எதற்காக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்?
அதற்கு பதில், இந்தி தெரியாத மாநிலங்களை தனியாக பிரித்து தனி நாடாக அறிவிக்கலாமே? எனவும் வன்னி அரசு கேள்வி எழுப்பிருப்பது சலசலப்பை கிளப்பி இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications