வீட்டு கடன் வட்டி குறையுதா? EMI உயருமா? நாளை 10 மணிக்கு இந்தியாவை அதிரவிட போகும் RBI ரிப்போர்ட்
சென்னை: நம்மில் பலரும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் வங்கிகளில் கடன் வாங்கியிருப்போம்.. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன் குறிப்பிட்ட தொகையை EMI ஆகக் கட்டுவது நடுத்தர குடும்பங்களின் வழக்கமாக உள்ளது.. இப்படி கடன் வாங்கியவர்களுக்கும், புதிதாக கடன் வாங்கப் போவோருக்கும் நாளை ஒரு மிக முக்கியமான நாள்.. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது வட்டி விகித கொள்கையை நாளை அறிவிக்க உள்ளது.. அது எப்படி இருக்க போகுதோ? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்து விட்டது.
வங்கிகள் தங்களுக்கு பணம் தேவைப்படும்போது ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கும்.. இதற்கு ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டிக்குத்தான் "ரெப்போ ரேட்" என்று பெயர்.

இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தினால், வங்கிகளும் பொதுமக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும்.. இதனால் நாம் கட்டும் EMI தொகை அதிகரிக்கும்.. ஒருவேளை வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தால், நமக்கும் வட்டி குறையும்..
வட்டி விகிதம் 5.25 சதவீதம்
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான குழு, கடந்த 2 நாட்களாக இது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது..
தற்போது வட்டி விகிதம் 5.25 சதவீதமாக உள்ளது.. நாளை வெளியாகும் அறிவிப்பில் இந்த வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றுதான் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.. அதாவது, வட்டி விகிதம் உயர்த்தப்படவும் மாட்டாது, குறைக்கவும் படமாட்டாது என்று தெரிகிறது..
EMI-யில் மாற்றம் வருமோ?
வட்டி விகிதம் மாறாமல் 5.25 சதவீதத்திலேயே நீடித்தால், நீங்கள் ஏற்கனவே கட்டி வரும் EMI தொகையில் எந்த மாற்றமும் இருக்காது.. இது கடன் வாங்கியவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியான செய்திதான்.. ஆனால், அதே சமயம் வட்டி விகிதம் குறையாது என்பதால், உங்கள் EMI குறையவும் வாய்ப்பில்லை.. பழைய நிலைமையே நீடிக்கும் என்கிறார்கள்.
தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போகிறது.. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது..
ரிசர்வ் வங்கி
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93 முதல் 95 ரூபாய் வரை சரிந்துவிட்டது.. இப்படி விலைவாசி உயரும் சூழல் இருக்கும்போது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க முன்வராது.. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அப்படியே வைத்திருப்பதுதான் சரியாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி நினைக்கிறது..
நாளை காலை இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகுதான் முழுமையான விபரம் தெரியவரும்.. இப்போதைக்கு இருக்கும் தகவல்களின்படி, உங்கள் மாதத் தவணை உயராமல் இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு நிம்மதியான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.. ஒருவேளை வட்டி உயர்ந்தால் மட்டுமே நாம் கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டி வரும்.. அதுவரை கவலைப்படத் தேவையில்லை..
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications