Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாத்துக்கும் இனி வெரிஃபிகேஷன்.. வாடகை வீட்டில் இருக்கீங்களா? வந்தது புதிய விதிமுறை.. பெரிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு புதிய தலைவலி வந்துள்ளது. அதன்படி வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கான வெரிஃபிகேஷன் எனப்படும் தனிப்பட்ட சோதனை அதிகரித்துள்ளது. அதேபோல் வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கும் வெரிஃபிகேஷன் அதிகரித்துள்ளது.

வீட்டு உரிமையாளர்கள், பல குடும்பங்கள், உரிமையாளர்கள், தரகர்கள், ஹவுசிங் நலச் சங்கங்கள் இதற்கான செயல்பாடுகளை அதிகரித்து உள்ளன. முன்பெல்லாம் வெறுமனே நீங்கள் யார், என்ன குடும்பம், பேச்சிலரா, எத்தனை பேர் என்பதை விசாரித்துவிட்டு நிறுத்திவிடுவார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல.. இப்போது நிறைய ஆவண சோதனைகள் நடந்து வருகின்றன.

house

வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சொத்தில் குடியேறுபவர்கள் யார் என்பதை அறிய வெரிஃபிகேஷன் வேலைகளை அதிகரித்துள்ளனர். அதாவது வாடகைக்கு வருபவர்களின் ஐடி கார்டு, ஆதார் கார்டு போன்ற விவரங்களை பாதுகாப்பிற்காக ஜெராக்ஸ் பெறுகின்றனர்.

இன்னும் சில உரிமையாளர்கள் வீட்டில் வேலைக்கு வருபவர்களுக்கும் வெரிஃபிகேஷன் தீவிரம் அடைந்து உள்ளது. ஐடி கார்டு, ஆதார் கார்டு போன்ற விவரங்களை பாதுகாப்பிற்காக இவர்களிடம் பெறுகின்றனர்.

குற்றங்களை தடுக்க நடவடிக்கை

வாடகைதாரர் சரிபார்ப்பில் அடையாள உறுதிப்படுத்தல், முகவரிச் சரிபார்ப்பு, பின்னணி ஆய்வு அடங்கும். சமயங்களில் போலீசாரும் கூட தேவையான நேரங்களில் இந்த ஆவணங்களை வாடகைதாரர்களிடம் பெறுகிறார்கள்.

பொதுவாக சில இடங்களில் குற்றங்கள் நடக்கும் நேரங்களில் போலீசாருக்கு இது போன்ற ஆவணங்கள் அவசியப்படும். இதனால் வாடகைக்கு வீடு கொடுக்கும் போது கூடவே கண்டிப்பாக பின்னணி வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும், ஆவணங்களை வாங்கி ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று போலீசாரும் அறிவுறுத்துகின்றனர்.

வெளியேறும் வாடகைதாரர்கள்

அதே சமயம் சமீபத்தில் மாற்றப்பட்ட வாடகை சட்டங்கள் காரணமாக பல வீட்டு ஓனர்கள் தங்கள் வீடுகளில் குடியிருப்பவர்களை வெளியேற்றி வருகிறார்களாம். முக்கியமாக இந்த சட்ட மாற்றம் தொடர்பாக விவரம் அறிந்த நபர்கள், தங்கள் வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்ற தீவிரம் காட்டி வருகிறார்களாம்.

வீட்டு வாடகைச் சட்டங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் வீடு ஓனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாம். சில மாற்றங்கள் தங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் வாடகைதாரர்களை வெளியேற்றி புதிய வாடகைதாரர்களை கொண்டு வரும் வழக்கம் அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூர், மும்பையில் இந்த நடவடிக்கைகள் அதிகம் நடந்து வருகின்றன.

வாடகைதாரர்களை வெளியேற்றும் அளவிற்கு வாடகை சட்டங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்து உள்ளது என்று உங்களுக்கு கேள்வி எழலாம். வாடகை சட்டத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

வீட்டு வாடகைச் சட்டம் மாற்றம்

வீட்டு வாடகைச் சட்டங்களில் சமீபத்தில் மத்திய அரசு விரிவான மாற்றங்களைச் செய்துள்ளது. இது முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. வீடு வாடகைக்கு விடும் முறை, அதன் விதிமுறைகள், இதற்காக வழங்கப்படும் கட்டுப்பாடுகள் என்று பல விஷயங்களை மாற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது அனைவருக்கும் நன்மை பயக்கும். வாடகைதாரர், வீட்டு உரிமையாளர் இருவருக்கும் பாதுகாப்பைக் கொண்டுவரும்.

அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் இனி எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். உள்ளூர் வாடகை ஆணையத்தில் 60 நாட்களுக்குள் பதிவு செய்வது அவசியம். இது ஒப்பந்தங்களின் சட்டபூர்வ தன்மையை உறுதி செய்யும். நிபந்தனைகள் குறித்த தேவையற்ற சர்ச்சைகள் குறையும்.

வீட்டு வாடகைச் சட்டங்கள்: கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்னென்ன?

வருடாந்திர வாடகை அதிகரிப்பு 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தால் அதன்படி இருக்கலாம். வீட்டு உரிமையாளர் வாடகையை உயர்த்த மூன்று மாதங்களுக்குமுன் அறிவிப்பு தர வேண்டும். வாடகைதாரர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத நிதிச் சுமை இதனால் குறையும். வாடகை விலைகளில் கணிசமான ஸ்திரத்தன்மை ஏற்படும்.

பாதுகாப்பு வைப்புத்தொகைக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக இரண்டு மாத வாடகையாக மட்டுமே இருக்கும். உதாரணமாக, மாத வாடகை ₹20,000 ஆக இருந்தால், ₹40,000 மட்டுமே வைப்புத்தொகை. இதனால் வாடகைதாரரின் ஆரம்பகால நிதிச் சுமை குறையும். ஒப்பந்தம் முடிந்ததும் வைப்புத்தொகை உரிய நேரத்தில் திருப்பித் தரப்படும்.

வீட்டு வாடகைச் சட்டங்கள்: உரிமை மற்றும் பொறுப்புகள்

வீடு காலி செய்யும் நடைமுறைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் சட்டபூர்வ காரணங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால், நீதிமன்ற அணுகுமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது வாடகைதாரர்களை பாதுகாக்கும். நியாயமற்ற வெளியேற்றம் இதன்மூலம் தடுக்கப்படும். சர்ச்சைகள் நீதிமன்றம் மூலம் நியாயமாக தீர்க்கப்படும்.

வாடகை விலை சொத்தின் ஆண்டு மதிப்பிற்கு ஏற்றதாக நிர்ணயிக்கப்படும். பொதுவாக 8-10 சதவீதமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ₹50 லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கு ₹40,000 முதல் ₹50,000 வாடகை சாத்தியம். அதிக வாடகை குறித்து வாடகைதாரர்கள் முறையாக முறையிடலாம். வாடகை ஆணையம் அல்லது நீதிமன்றத்தில் புகார் செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+