ஏபிவிபி சுப்பையா கைது!.. திடீரென தோன்றிய "மூதாட்டி"! போலீஸ் வைத்த ட்விஸ்ட்.. நடந்தது என்ன?
சென்னை: நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண்முகம் சுப்பையாவை ஆதம்பாக்கம் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பின் நடந்தது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
சென்னை ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் சண்முகம் சுப்பையா. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியின் தேசிய தலைவராக இவர் முன்பு பதவி வகித்தார்.
ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி செய்து வருகிறார். இதற்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் தலைவர் பதவியையும் வகித்து இருக்கிறார்.

என்ன செய்தார்
ஆதம்பாக்கத்தில் தனது அப்பார்ட்மெண்டில் பார்க்கிங் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு மூதாட்டி வீட்டு வாசலில் இவர் சுறுநீர் கழித்தார். அதோடு அவர்கள் வீட்டு வாசலில் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்கை தூக்கி எறிந்து தொந்தரவு கொடுத்தார். மேலும் அவர் வீட்டு வாசலில் இறைச்சிகளை வீசி எறிந்ததாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது. 2020ல் இந்த சமபவம் நடைபெற்றது.

சிசிடிவி
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் அப்போது வெளியாகின. இது தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மூதாட்டி சார்பில் பாலாஜி விஜயராகவன் என்பவர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனாலும் இரண்டு வருடமாக இவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் சமீபத்தில் அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு ஏபிவிபி அமைப்பினர் முதல்வர் வீட்டின் முன் போராட்டம் நடத்தி கைதும் செய்யப்பட்டனர்.

போராட்டம்
இந்த போராட்டத்திற்கு சுப்பையா தூண்டுதலாக இருந்ததாக புகார் வைக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவர் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சிறுநீர் கழித்த வழக்கில் நேற்று சுப்பையா கைது செய்யப்பட்டார். இதில் நேற்று இவர் ஆலந்தூர் மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். மேஜிஸ்ட்ரேட் வைஷ்ணவி இந்த வழக்கை நேற்று இரவு விசாரித்தார். போலீசார் இவரை ஆஜர் படுத்திய போது அங்கே திடீரென அந்த பக்கத்துவீட்டு மூத்தாட்டி தோன்றினார்.

கோர்ட் விசாரணை
திடீரென கோர்ட்டுக்கு வந்த மூதாட்டி.. தன் வீட்டில் சுப்பையா சிறுநீர் கழித்தது உண்மைதான்.. ஆனால் இப்போது அவர் பிரச்சனை செய்வது இல்லை என்று கூறினார். போலீசுக்கு தெரியாமல் திடீரென சுப்பையா ஆட்கள் மூலம் இந்த மூதாட்டி கோர்ட்டு முன் ஆஜர் படுத்தப்பட்டார். போலீசுக்கே தெரியாமல் மூதாட்டியை மிரட்டி அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தியுள்ளதாகவும். சுப்பையாவை பற்றி நல்லவிதமாக தெரிவிக்க அவரின் ஆட்கள் இப்படி செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டல்
ஆனால் என்னதான் அந்த மூதாட்டியை மிரட்டி அழைத்து வந்து போலீசில் ஆஜர் படுத்தினாலும், போலீசார் தரப்பு இதில் கடும் வாதங்களை வைத்தனர். சிசிடிவி ஆதாரங்களை காட்டினர். அதேபோல் அதற்கு பின்பும் அந்த மூதாட்டிக்கு இவர் தொல்லை கொடுத்து வந்ததையும் ஆதாரத்தோடு காட்டினர். இதனால் மூதாட்டி வந்து வாக்குமூலம் கொடுத்ததும் பலன் இல்லாமல் போக கடைசியில் சுப்பையாவை சிறையில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
Recommended Video

உண்மை
அதோடு சுப்பையா சிறுநீர் கழித்தது உண்மை என்பதையும் மூதாட்டி தனது வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். இதையடுத்தே மார்ச் 31ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதையடுத்து செங்கல்பட்டு சிறையில் சுப்பையா அடைக்கப்பட்டார். அந்த மூதாட்டி திடீரென நேற்று கோர்ட்டுக்கு வந்தது எப்படி? யார் அழுத்தம் கொடுத்தது என்று விசாரித்து வருகின்றனர். இது போக வழக்கில் புகார் அளித்த பாலாஜி விஜயராகவன் தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications