கஜா புயல் தாக்கம் சென்னையில் எப்படி இருக்கும்?
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில், சென்னை உட்பட தமிழகத்தின் வட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு, கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம்முறை புயலுக்கு பெயர் சூட்டும் பொறுப்பு, தாய்லாந்து நாட்டுடையது என்பதால், அந்த நாடு கஜா என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளது.

கன மழை
வரும் வியாழக்கிழமை, புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இது சென்னை நகருக்கும் பொருந்தும். வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் பெய்யக்கூடும். கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தவிர, தென் தமிழகம், கேரளாவில் சில பகுதிகளிலும் இந்த காலகட்டத்தில் கன மழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் இருக்கும் இடம்
இன்று காலை, 5.30 மணி அளவில், சென்னையில் இருந்து வடகிழக்கே, 740 கிலோ மீட்டர் தொலைவில், புயல் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வரும் 15ம் தேதி வியாழக்கிழமை, தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 14 ஆம் தேதி முதல் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரையிலான கடலோரப் பகுதிகளில் கனமழை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர ஆலோசனை
கனமழையை எதிர்கொள்வது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் இன்று உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பல மாவட்டங்கள்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது பேஸ்புக் பக்கத்தில் இதுபற்றி கூறும்போது, வட மேற்கு தமிழகத்தில் புயல் காரணமாக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கனமழையை சந்திக்கும். உள் மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகம்
கேரளாவில் லேசான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவை பெற்றுள்ளது. கஜா புயல் காரணமாக இப்போது ஓரளவுக்கு மழை பொழிவை பெறும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார் .
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications