இடுக்கண் களைவது நட்பு! ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பிய சோனியா.. காங்கிரசுக்கு திமுக செய்யும் பெரிய உதவி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இடையில் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கியமான உதவி ஒன்றை தமிழ்நாட்டில் திமுக செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மெதுவாகத்தான் செயல்பட்டு வருகிறது. உதாரணமாக அமுக எல்லாம் வேட்பாளர்களை அறிவித்த பின்தான் கோஷ்டி மோதல் நிறைந்த காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

How CM Stalin is ready to help Congress financially in TN for Lok Sabha elections 2024

அதிலும் முதலில் தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைத்தான் காங்கிரஸ் முதலில் வெளியிட்டது. திருவள்ளூர் தனி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியாது.

கடலூர் தொகுதியில் டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்

கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்பி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இரவோடு இரவாக அறிவிப்பு; இதையடுத்து மறுநாளே நெல்லை தொகுதியில் ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டி யிடுவதாக அறிவிக்கப்பட்டார். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டாக்டர் தாரகை வேட்பாளராக அறிவிப்பு வெளியானது.

மயிலாடுதுறை ஏன் தாமதம்: மயிலாடுதுறை மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வேட்புமனு முடியும் நாளுக்கு முதல் நாள் பெரும் இழுபறிக்கு பிறகு மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர் சுதா என்பவர் அறிவிக்கப்பட்டு அவர் மறுநாளே அவசரமாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

மெத்தனம்; இப்படி வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கடுமையாக மெத்தனம் காட்டி வந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்திலும் சொதப்பி வருகிறது.

ஸ்டாலினுக்கு போன தகவல்: இது பற்றிய தகவலும் ஸ்டாலினுக்கு சென்றுள்ளதாம். . தினமும் பிரச்சாரத்திற்கு இடையே நேரம் கிடைக்கும் போதே மா.செ.க்களுடன் காணொலி காட்சி வழியாக தேர்தல் தொடர்பாக விவாதிக்கவிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் வலம் வருகிறார். பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், உள்ளடி வேலைகள் என எதுவாக இருப்பினும் ஸ்டாலினுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.

நம் வேட்பாளர்களை மட்டுமல்லாமல் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்றும், ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்தால் ஏற்கனவே எச்சரித்தபடி பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்றும் மீண்டும் மா.செ க்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலயத்தினர்

காங்கிரஸ்: இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைமை சார்பாக சோனியா முக்கியமான ஒரு நபரின் வழியாக ஸ்டாலினுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளாராம். அதில், காங்கிரசில் தமிழக வேட்பாளர்கள் 5-6 பேரிடம் சுத்தமாக பணம் இல்லை. நாங்களும் 10 வருடமாக ஆட்சியில் இல்லை. நீங்கள் பணம் கொடுத்து உதவுங்கள்.

எங்களுக்கு பணம் கொடுப்பவர்கள் முடக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நிதி இல்லை. உதவுங்கள் என்று சோனியா சார்பாக மெசேஜ் சென்றுள்ளதாம். இதை ஸ்டாலின் உணர்ந்து கொண்டு.. காங்கிரசுக்கு உதவ தயார் என்று அறிவித்துள்ளாராம். அந்த 5-6 வேட்பாளர்களுக்கு செலவு செய்ய திமுக முன் வந்துள்ளதாம்.

ஸ்டாலின் பேச்சு, இது தொடர்பாக நிர்வாகிங்களிடம் பேசிய ஸ்டாலின், நம்முடைய கூட்டணி கட்சிகளுக்கு செலவு செய்ய பணம் இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே 4 வேட்பாளர்களை தவிர மற்றவர்களுக்கு செலவு செய்ய பணம் இல்லை. அங்கே பொறுப்பு அமைச்சர்கள்தான் செலவு செய்ய வேண்டும்.

கூட்டணி கட்சிகள் இருக்கும் இடங்களில்தான் எதிர்கட்சிகள் வெற்றிபெற பார்க்கும். 40க்கு 40 என்ற இலக்கை அடைவதே நம் குறிக்கோள். நம்முடைய பொருளாதாரத்தை உடைக்க பார்ப்பார்கள். நமக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயம் இருக்க கூடாது.

இருந்தாலும் எதற்கும் கவனமாக இருங்கள். சில அமைச்சர்களை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின்.. நீங்கள் வேலை பார்க்கும் தொகுதிகள்தான் கொஞ்சம் வீக். அதனால் பார்த்து இருந்து கொள்ளுங்கள். கட்சிக்கு நிதி கொடுக்க தயாராகி இருப்பவர்களை ஏற்கனவே ரெய்டு மூலம் தூக்கி வருகிறார்கள். அதை பற்றி கவலைப்படாமல் கூட்டணி கட்சிகளுக்கும் செலவு செய்யுங்கள்.

தேர்தலுக்கு பின்பாக நீங்கள் செலவு செய்த பணங்களை வாங்கிக்கொள்ளலாம். கவலையே படவேண்டாம். இப்போது 40க்கு 40 என்ற இலக்கே முக்கியம் என்று முதல்வர் ஸ்டாலின் மீட்டிங்கில் உத்தரவிட்டுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+