அண்ணாவிற்கு ஒன்று என்றதும்.. அண்ணாமலையை தூக்கி எறிந்த அதிமுக.. கொதித்த 3 மாஜிக்கள்தான் காரணமே!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்து உள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு 3 மாஜி அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு கொடுத்ததும் இந்த முறிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக பாஜக இடையே தற்போது தீவிர மோதல் நிலவி வருகிறது. ஏற்கனவே ஒரு முறை ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்ற பாணியில் அண்ணாமலை பேசியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.

அப்போதே அதிமுக - பாஜகவினர் இடையே அது கடுமையான மோதலுக்கு வழி வகுத்தது. ஊழல் செய்தவர்களை தலைவர்களாக வைத்து இருந்த கட்சி என்று அதிமுகவை விமர்சனம் செய்து இருந்தார். . இவர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததை அதிமுகவின் ஜெயக்குமார் போன்றவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது அண்ணாமலை பேசியது அவருக்கே எதிராக திரும்பி உள்ளது.
உச்சம் அடைந்துள்ளது: அதிமுக பாஜக இடையே தற்போது உச்சம் அடைந்து உள்ளது. தற்போது முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார். இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை.
மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.
இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஜெயக்குமாரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து இருந்து நிலையில், தற்போது அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுகவை நம்பி பாஜக இருக்கும் நிலையில் அதிமுகவின் இந்த முடிவு பாஜகவிற்கு பேரிடியாக மாறி உள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு 3 மாஜி அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜு கடுமையாக எதிர்ப்பு கொடுத்ததும் இந்த முறிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அண்ணா என்று வந்ததும் அதிமுகவினர் அண்ணாமலையை தூக்கி எரிந்தது பெரிய விவாதங்களை ஏற்படுத்தியது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications