எடப்பாடியார் கேக் எடுத்து வளர்மதி அக்காவுக்கு ஊட்ட.. கோகுல இந்திராவுக்கு ஓபிஎஸ் ஊட்ட.. கோலாகல அதிமுக
அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது
சென்னை: அதிமுக சார்பில் இன்று சென்னையில் நடத்தப்பட்ட மகளிர் தினம் கொண்டாட்டம்தான், சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அதிமுகவில் சசிகலாவிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற பரபரப்பு காலையில் இருந்தே அரசியல் களத்தில் தொற்றி கொண்டது..
சமீபத்தில் தேனியில் நடந்த அதிமுக கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை மறுபடியும் கட்சியில் எந்த நிபந்தனையும் இல்லாமல் சேர்த்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அது ஓபிஎஸ்ஸிடமும் வலியுறுத்தப்பட்டது.

ஓபிஎஸ்
இதையடுத்து, ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா, சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார்.. இந்த 2 விஷயங்களும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இதற்கு பிறகு ஓ.ராஜாவை கட்சியில் இருந்து வேறு வழியின்றி நீக்கம் தொடர்பான அறிவிப்பில், ஓபிஎஸ் கையெழுத்து போட்டார் என்றாலும், அவரது உண்மை நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை. இந்நிலையில்தான் இன்று சென்னை தலைமை அலுவலகத்தில், மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளதாகவும், இன்றைய தினமே சசிகலா விஷயத்திற்கு ஒரு முடிவு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இபிஎஸ்
காரணம், சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே கலந்து கொள்ளும் நிலையில், மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், நிச்சயம் சசிகலா விவகாரம்கலந்து பேசப்படும் என்றும் நம்பப்பட்டது.. எதிர்பார்த்தபடியே, மகளிர் தினம் அதிமுக சார்பில் கட்சி தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விழாவில் கலந்து கொண்டனர்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கோகுல இந்திரா, வளர்மதி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.. சசிகலா விவகாரம் பேசப்பட்டு, காரசார விவாதங்கள் இன்றைய தினம் நடக்கும் என்று எதிர்பார்த்தால், நிகழ்ச்சி வேறு மாதிரியாக நடந்து முடிந்துள்ளது.. மகளிர் தின விழாவில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கேக்கை வெட்டி உள்ளனர்..

வளர்மதி
அந்த கேக்கை எடுத்து, வளர்மதிக்கு எடப்பாடி பழனிசாமி ஊட்டினார்.. உடனே ஓபிஎஸ்ஸும் கேக் எடுத்து, பக்கத்தில் இருந்த கோகுல இந்திராவுக்கு ஊட்டினார்.. இதற்கு பிறகு, கோகுல இந்திராவும், வளர்மதியும் கேக் எடுத்து, ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்கும் மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். பிறகு, தொண்டர்களுக்கும் கேக் ஊட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்... தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.. இறுதியில் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, மகளிர் விழா சிறப்பாக முடிந்தது..!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications