"ஆபாசம்".. ராயப்பேட்டை ரோட்டில் சங்கீதா செய்த காரியத்தை பாருங்க.. அவர் "பாய்பிரண்டாம்".. கலிகாலம்
பாய்பிரண்டை கொலை செய்த சங்கீதா உட்பட 4 பேர் கைதாகி உள்ளனர்
சென்னை: மூக்குமுட்ட நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடித்துவிட்டு, ஒருவரை போட்டு நடுரோட்டில் கட்டையால் அடித்து தாக்கி உள்ளார்.. இப்படியெல்லாம் ரவுடித்தனம் செய்தது, யாரோ ஒரு ஆண் என்று நினைத்துவிடாதீர்கள்.. சங்கீதா என்ற இளம்பெண்ணின் அட்ராசிட்டி இது!
ராயப்பேட்டை, காசிம் தெருவைச் சேர்ந்தவர் தாவித் ராஜா.. 20 வயதாகிறது.. இவர், கடந்த 14ந்தேதி பீட்டர்ஸ் சாலையில் ரோட்டில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலைமையில் போராடிக் கிடந்தார்.. இதை பார்த்ததுமே அங்கிருந்த பொதுமக்கள், தாவித் ராஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்...

ராயப்பேட்டை
ஆனால், அவரை செக் செய்து பார்த்த டாக்டர்கள், ராஜா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று சொல்லிவிட்டார்கள்.. இதனால், ராயப்பேட்டை போலீசார் இது தொடர்பான வழக்கை பதிவு செய்து விசாரணையையும் ஆரம்பித்தனர்.. இறந்துபோன ராஜா யார் என்று தெரியவில்லை.. அதனால், அவரை கொன்றவர்களோ, அல்லது அவருக்கு என்ன பிரச்சனை என்றோ போலீசாரால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை.. பிறகு, ராஜா இறப்பதற்கு முந்தைய நாள், அதாவது, 13ம் தேதி, அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்தனர்.

சங்கீதா ஆவேசம்
அப்போதுதான், சங்கீதாவை கேமராவில் பார்த்தனர்.. பைக்கில் வந்துள்ளார் சங்கீதா.. அவருடன் 2 பேர் வந்துள்ளனர்.. ஒய்எம்சிஏ பகுதியில் ராஜாவை, அடித்து போட்டுவிட்டு, அதே பைக்கில் தப்பி செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது.. அந்த அடையாளங்களை கொண்டு, போலீசார், சம்பந்தப்பட்டவர்களை தேடினார்கள்.. இறுதியில், ஜீவா (22), ராஜேஷ் (23), பார்த்திபன் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.. சம்பந்தப்பட்ட சங்கீதாவையும் கைது செய்தனர். சங்கீதாவுக்கு 27 வயதாகிறது.. ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் வசித்து வருகிறார்.

சங்கீதா - ராஜா
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின.. இறந்துபோன ராஜா, இவர்கள் 4 பேருக்கும் நெருங்கிய நண்பராம்.. 13ம் தேதி நைட், ராயப்பேட்டை, சத்யம் தியேட்டர் பக்கத்திலுள்ள ஒரு பார்க்கின் பின்புறம் இவர்கள் 5 பேரும், ஒன்றாக சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. அப்போது சங்கீதாவுக்கும், தாவித் ராஜாவுக்கும் இடையே ஏதோ வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.. இந்த தகராறில், சங்கீதாவை, தாவீத் ராஜா ஆபாசமாக பேசிவிட்டாராம்.. அதனால், ஆத்திரமடைந்த சங்கீதா, ராஜாவை தாக்க ஆரம்பித்துள்ளார்.. உடனே மற்ற நண்பர்களும், ராஜாவை கட்டையால் அடித்து மிருகத்தனமாக தாக்கி உள்ளனர்.

சங்கீதா
இதில், வலி பொறுக்க முடியாமல் அலறிய தாவித் ராஜா, அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துவிட்டார்.. இதை பார்த்ததும், பயந்துபோன 4 பேரும், ராஜாவை பைக்கில் ஏற்றி ஒய்எம்சிஏ தெற்கு நுழைவு வாயிலில் போட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.. இவ்வளவும் போதையில் நடந்து முடிந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.. இதையடுத்து, கொலை செய்த 4 பேரும் கைதாகி உள்ளனர்.. சங்கீதாவும்தான்..!


Click it and Unblock the Notifications
