சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாட்டிக்கிட்டாரே! அதிகாலையே கனல் கண்ணனை கண்டுபிடித்த போலீஸ்.. புதுச்சேரியில் தட்டி தூக்கியது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: பெரியார் சிலைக்கு எதிராக பேசிய கனல் கண்ணனை மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர். இவரை புதுச்சேரியில் போலீசார் கைது செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் பெரியார் சிலைக்கு எதிராக சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியது பெரிய சர்ச்சையானது. இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் பொறுப்பில் கனல் பண்ணன் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கனல் கண்ணன் பெரியாருக்கு எதிராக பேசினார்.

அதில் ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால்.. பெரியார் சிலைக்கு என்னவாகும்?.. யாருக்கு சிலை வைப்போம்.. பாஜக அண்ணாமலை பாஜக ஆட்சிக்கு வந்தால்.. பெரியார் சிலைக்கு என்னவாகும்?.. யாருக்கு சிலை வைப்போம்.. பாஜக அண்ணாமலை

பேசியது என்ன?

பேசியது என்ன?

அவர் தனது பேச்சில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக பெரியார் சிலை இருக்க கூடாது. கடவுள் இல்லை என்று சொன்னவன் சிலை எதற்கு கோவிலுக்கு முன் இருக்க வேண்டும். அவரின் சிலையை இடிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தரிசனம் முடித்து இவரின் சிலையை பார்ப்பது சரியாக இருக்காது. அவரின் சிலையை உடைத்தால் அதுதான் உண்மையான எழுச்சி, என்று கனல் கண்ணன் கூறினார்.

சர்ச்சை

சர்ச்சை

இவரின் பேச்சு பெரிய சர்ச்சையானது. இணையம் முழுக்க அவரின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கனல் கண்ணனுக்கு எதிராக திமுகவினரும், திகவினரும் கடும் விமர்சனங்களை வைத்தனர். கனல் கண்ணனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். ஏற்கனவே அங்கு பெரியார் சிலையை சில வருடங்களுக்கு முன் சிலர் சேதப்படுத்த முயன்றனர். இதன் காரணமாக அங்கே கலவரம் ஏற்பட்டது.

மீண்டும் கலவரம்

மீண்டும் கலவரம்

இப்போது மீண்டும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படி கனல் கண்ணன் பேசி இருக்கிறார் என்று இந்த புகாரில் கூறப்பட்டது. இவரின் பேச்சு இணையம் முழுக்க பெரிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து கலவரத்தை தூண்டுதல்,. இரண்டு பிரிவிற்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ய களமிறங்கினர்.

கனல் கண்ணன் தலைமறைவு

கனல் கண்ணன் தலைமறைவு

கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது உடனே தலைமறைவானார். இதையடுத்து அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்தது. அவருக்கு சொந்தமான இரண்டு வீடுகளில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். வடபழனி, வளசரவாக்கம் ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள அவரின் வீடுகளில் சோதனை செய்தனர். அவரின் வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில்,வீட்டில் இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள்.. கனல் கண்ணன் இங்கே இல்லை. அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

எங்கே போனார்?

எங்கே போனார்?

இதற்கு இடையில் இன்னொரு பக்கம் வழக்கறிஞர்கள் மூலம் கனல் கண்ணன் ஜாமீனுக்கு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் கனல் கண்ணன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவருக்காக பெரிய வழக்கறிஞர் படை ஆஜராகியும் கூட முன் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் கனல் கண்ணன் தலைமறைவானார்.

தேடல்

தேடல்

இதையடுத்து போலீசார் கனல் கண்ணனை தீவிரமாக தேட தொடங்கினார். சென்னை அலுவலகத்திலும் கனல் கண்ணன் இல்லை. இதனால் போலீசார் தலைமறைவாகி உள்ள கனல் கண்ணனின் போனை தீவிரமாக டிராக் செய்து வந்தனர். அவர் யாருக்காவது போன செய்கிறாரா என்று ஆய்வு செய்து வந்தனர். சைபர் கிரைம் உதவியுடன் இதற்கான விசாரணை நடந்து வந்தனர். அவருக்கு நெருக்கமான இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் போலீசார் அவரை தேடினார்கள்.

Recommended Video

    கனல் கண்ணன் அப்படி என்ன பெரியார் பற்றி பேசினார்?
    போன் கால்

    போன் கால்

    இந்த நிலையில் கனல் கண்ணன் இந்து முன்னணி நிர்வாகிகள் சிலருக்கு போன் செய்ததை வைத்து.. அவர் புதுச்சேரியில் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போன்தான் அவரை காட்டிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை புதுச்சேரி உள்ளூர் சோர்ஸ் மூலம் போலீசார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து இன்று அதிகாலையே சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் புதுச்சேரி சென்றனர். அங்கு பதுங்கி இருந்த கனல் கண்ணனை கைது செய்தனர். இவரை இன்று நீதிபதி வீட்டில் (விடுமுறை தினம்) ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்ய உள்ளனர்.

    English summary
    How did Chennai police arrest Kanal Kannan? What happened in Puducherry?பெரியார் சிலைக்கு எதிராக பேசிய கனல் கண்ணனை மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர். இவரை புதுச்சேரியில் போலீசார் கைது செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X