மூச்சு கூட வெளியே போகல.. எதிர்க்கட்சிகளுக்கு கசியவே இல்லை.. ஸ்டாலின் தந்த ரூ.5000.. எப்படி நடந்தது?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று மகளிருக்கு ரூ.5000 தரும் அறிவிப்பை வெளியிட்டார். மகளிருக்கு தொகை வழங்கிய பின்பே.. அதாவது வரவு வைக்கப்பட்ட பின்பே இந்த அறிவிப்பது அவர் வெளியிட்டு இருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை அறிவிப்பு
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!, என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கு கசியவே இல்லை
இந்தச் செயல்பாட்டின் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எதிர்க்கட்சிகள் எவருக்கும் இது நடப்பது பற்றித் தெரியாது. எந்தவொரு தகவல் கசிவும் இல்லாமல் இது திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட விதம் இன்றைய அரசியல் மற்றும் ஆட்சியில் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆனால் அதை ஸ்டாலின் நிகழ்த்திக்காட்டி உள்ளார்.
இதன் மூலம் ஒரே நாளில் இரண்டு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு உள்ளார். மேலும்.. மகளிர் உரிமை தொகையை தேர்தலை காரணம் காட்டி சட்ட ரீதியாக தடுக்க வாய்ப்புகள் உள்ள காரணத்தாலும் கூட.. ஸ்டாலின் முன்கூட்டியே இந்த பணத்தை அனுப்ப முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது இதற்கு எதிராக வழக்கு தொடுக்கலாம்.. தேர்தல் ஆணையமே கூட தடை நடவடிக்கை எடுக்கலாம்.
இல்லையென்றால் இன்று மற்ற கட்சிகள் வேறு அறிவிப்புகளை வெளியிடலாம். இதை எல்லாம் துல்லியமாக யூகித்து.. இன்று வேகமாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்,
பிப்ரவரி வந்ததும் மோடி வருவார், தேர்தல் தேதி அறிவிக்கப்படும், உடனே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரும், அந்த சமயத்துல உரிமைதொகை போடமுடியாதபடி செக் வைக்க வாய்ப்புள்ளது தெரிந்து அறிவிப்பு வந்துள்ளது. முக்கியமாக கோடைகால தொகை என்று இதை யோசித்தது கவனிக்கத்தக்கது . ஏனென்றால் 2021 தேர்தல் தேதிக்கும் முடிவு அறிவிக்கிறதுக்கும் கிட்டத்தட்ட ஒருமாசத்துக்கு மேல எடுத்துக்கொண்டார்கள். . அந்த மாதிரி காலதாமதம் ஆனாலும் மகளிர் தொகைக்கு எந்த சிரமும் வந்துடக்கூடாதுன்னு தொலைநோக்கோட மே, ஜூனுக்கு சேர்த்து பணம் கொடுத்துள்ளனர்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications