FBI வைத்த பொறி.. லஞ்சம் தர முயன்ற கவுதம் அதானி? மாட்டியது எப்படி? அமெரிக்காவில் பாய்ந்த வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லஞ்சம் தர முயன்றதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2100 கோடி ரூபாய் முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளது. 2023ம் தேதி இது தொடர்பாக அமெரிக்க எப்பிஐ கவுதம் அதானி உறவினர் சாகர் அதானி நியூயார்க் வீட்டில் ரெய்டு செய்தது குறிப்பிடத்தக்கது.

250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது . கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

adani gautham adani

அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பின்னணி: கவுதம் அதானி ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். அமெரிக்கா முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாக.. அவர்களிடம் உண்மைகளை மறைத்துவிட்டதாகவே அதானி மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் அவரின் Adani Green Energy Ltd 12 கிகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் திட்டத்தில் கையெழுத்து போட்டு உள்ளது. இதற்காக பல கோடிகளை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு தந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்த அமெரிக்க நிறுவனங்களிடம் அதை மறைத்து .. 265 மில்லியன் டாலரை அதானி குழுமம் லஞ்சமாக கொடுக்க முயன்றதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரில் உள்ள முக்கியமான விஷயம், சோலார் திட்டத்திற்காக அமெரிக்க நிறுவனங்கள் செய்த முதலீட்டு பணத்தை லஞ்சமாக அதானி இந்திய அதிகாரிகளுக்கு தந்துள்ளார். அதாவது அமெரிக்க நிறுவனங்களின் செலவில்.. அதானி லஞ்சம் தந்துள்ளார் அல்லது தர முயன்று உள்ளார் என்று புகாரில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்க அரசு வழக்கறிஞர் பிரேயன் பீஸ் இது தொடர்பாக கூறுகையில், அதானி அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டு பணத்தை சோலார் திட்டத்திற்கு லஞ்சமாக கொடுத்துள்ளார். கொடுக்க முயன்றுள்ளார். கடந்த மார்ச் 2023ம் தேதி இது தொடர்பாக அமெரிக்க எப்பிஐ கவுதம் அதானி உறவினர் சாகர் அதானியின் நியூயார்க் வீட்டில் சோதனைகளை செய்தனர். அதில் பல பென் டிரைவ், ஆவணங்கள் மீட்கப்பட்டன.

அதன் ஒரு கட்டமாகவே தற்போது அதானி மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. ப்ரூக்ளீன் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகார்கள், கோர்ட் ஆவணங்கள் அனைத்தும் அமெரிக்காவில் இருந்து அதானி குழுமத்திற்கும் அமெரிக்காவில் உள்ள அவர்களின் கிளைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்தியாவில் சோலார் திட்டத்தை வாங்குவதாக சொல்லி முதலீட்டாளர்களை அமெரிக்காவில் இருந்து அதானி பெற்றுள்ளார். அந்த பணத்தை வைத்து அவர் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றுள்ளார். அல்லது லஞ்சம் தந்துள்ளார். இதை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்துள்ளார் உள்ளிட்ட புகார்கள் இதில் அனுப்பப்பட்டு உள்ளன. இது தொடர்பாக கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+