கனமழைக்கு நடுவேயும் சென்னையில் வெள்ளம் வடிந்தது எப்படி? பின்னணியில் திமுகவின் Drain Grates திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் சென்னையில் உள்ள சுரங்கப்பாதை உள்பட சில இடங்களில் உடனடியாக மழைநீர் வற்றி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட Stormwater Drain Gates பணிகள் தான். இந்த பணி எப்படி நேற்றைய மழையின்போது கைக்கொடுத்தது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

chennai rain

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. குறிப்பாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் பல இடங்களில் விடியவிடிய கனமழை கொட்டி தீர்த்தது. எதிர்பார்த்தை விட அதிகளவில் மழை பெய்துள்ளது.

எண்ணூர், திருவொற்றியூர், மணலி, பிராட்வே, பிரகாசம் சாலை, மண்ணாடி, பாரிஸ் கார்னர் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் மழை பெய்துள்ளது. இதில் சில இடங்களில் 30 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது.

Chennai Rain

இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி சென்னை எண்ணூர் கடற்கரையில் அதிகபட்சமாக 222.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையில் பல இடங்களில் எதிர்பார்த்தை விட அதிகளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் உள்ளன.

இன்று காலை நிலவரப்படி அவற்றில் 21 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்றும், போக்குவரத்து சீராகவும் உள்ளது. அதேபோல் நேற்று இரவு மழை பெய்தபோது திருவொற்றியூர், பிராட்வே, பிரகாசம் சாலை, பாரீஸ் கார்னர் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியது. ஆனால் இன்று காலையில் மழைநீர் வடிந்தது. அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் நேற்று இரவு குளம்போல் வெள்ளம் தேங்கியது. காலையில் அந்த மழை வெள்ளம் அப்படியே வடிந்தது.

Chennai Rain

இதனால் கனமழைக்கு நடுவே தண்ணீர் வேகமாக வடிந்ததால் சென்னை மக்கள் ஹேப்பியாகி உள்ளனர். சென்னையில் அதிகளவில் மழை பெய்தும் உடனடியாக தண்ணீர் வடிந்ததற்கு முக்கிய காரணம் கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட Stormwater drain gates திட்டம் தான்.

இந்த திட்டம் வழக்கமான பாதாள சாக்கடை அல்லது மூடிய நிலையில் இருக்கும் வடிகால் திட்டத்தில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும். மூடிய வடிகால் திட்டம் என்றால் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மழைநீர் வடிகால் உள்ளே செல்லும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.

ஆனால், இந்த Stormwater Drain gates திட்டத்தில் சாலையோரம் வடிகால் செல்லும். இந்த வடிகால் உள்ளே சாலைகளில் தங்கும் தண்ணீர் எளிதாக செல்லும் வகையில் ஆங்காங்கே துளைகள் போடப்பட்டு இருக்கும். சாலைகளின் ஓரத்தில் இதற்கென தனியாக துளை இருக்கும்.

அதன்மீது இடைவெளியுடன் கூறிய இரும்புகள் போடப்ட்டு இருக்கும். அதன் வழியாக சாலைகள், சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீர் உடனடியாக வடிகாலுக்குள் சென்றுவிடும். இந்த திட்டம் கடந்த ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டம் கைக்கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+