பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்.. பாலமெல்லாம் வெள்ளத்துல காணோம்! வாடித் தவிக்கும் வடசென்னை மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெரம்பூர், மாதவரம், புழல், வியாசர்பாடி, கொளத்தூர் உள்ளிட்ட வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, பெரம்பூர், மாதவரம், மூலக்கடை, புழல், பட்டாளம், டவுட்டன் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு சென்னையின் பெரம்பூர், வியாசர்பாடி மற்றும் வடசென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, பெரம்பூர் பி.பி. சாலையில் வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு மழைநீர் தேங்கியது.

Heavy Rain

அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள், வாகனங்களை இயக்க முடியாமல் தள்ளிச் சென்றனர். இதற்கிடையே, பி.பி. சாலையில் சொகுசு கார் ஒன்று மழைநீரில் சிக்கிப் பழுதடைந்து நின்றது. இதனால், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பிற வாகனங்கள் செல்ல முடியாமல், சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

சென்னையில் கனமழை

இதன் காரணமாக, அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்கள் பேருந்துகளில் இருந்து இறங்கி, மழைநீரில் நடந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பாக, வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

வடசென்னை வெள்ளம்

இதையடுத்து, பழுதடைந்து நின்ற சொகுசு காரை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அந்த வாகனத்தை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, பொதுமக்களே மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்தனர். இதன் பின்னர், அரசுப் பேருந்துகள் மெல்ல நகரத் தொடங்கின.

சுரங்கப்பாதையில் மழைநீர்

அந்தப் பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்திருந்ததால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தொடர்ந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல், முரசொலி மாறன் மேம்பாலம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் சிக்கித் தவித்தன. அப்போது, அங்கு பணியில் இருந்த போக்கு வரத்துக் காவலர்கள், மழைநீரில் சிக்கிய ஆட்டோவை தள்ளிச் செல்ல உதவினார்.

பொதுமக்கள் கோரிக்கை

தொடர்ந்து, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டு போக்கு வரத்தைச் சீரமைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீரை விரைந்து அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பூர் வெள்ளம்

மேலும், பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல சாலைகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால், வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடனும் அவதியுடனும் இருந்து வருகின்றனர்.

புழல் ஏரி

ஆறுதல் அளிக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்குன்றம், புழல் சுற்றுவட்டார இடங்களில் நேற்று பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றம் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+