பிடிஆர்-ரை வீழ்த்தியும்.. முஸ்தபாவிற்கு அமைச்சர் பதவியை விஜய் கொடுக்காதது ஏன்? பின்னணியில் சனாதனம்
சென்னை: மதுரை மத்திய தொகுதியில் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணி வேட்பாளர் இயக்குநர் சுந்தர் சி ஆகியோரை வீழ்த்தி வென்ற தவெகவின் முஸ்தபாவிற்கு அமைச்சர் பதவியை முதல்வர் விஜய் கொடுக்கவில்லை. தவெகவில் பிரபலமான தலைவர்களில் ஒருவராக வலம் வரும் முஸ்தபாவின் பெயர் அமைச்சர் பட்டியலில் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதும், அன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இதில் 30 பேர் தவெகவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 4 அமைச்சர் பதவிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ்க்கு 2, விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்வர் உள்பட 35 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற முடியும். அந்த வகையில் பார்த்தால் தமிழக அமைச்சரவை முழுவதுமாக நிரம்பிவிட்டது. இனி யாராவது ஒருவரை புதிதாக அமைச்சராக்க வேண்டும் என்றால் ஒருவரை நீக்கிவிட்டு தான் செய்ய முடியும்.
முஸ்தபாவிற்கு அமைச்சர் பதவி இல்லை
தவெகவில் 30 பேர் அமைச்சர்களாக உள்ள நிலையில் இஸ்லாமியர் ஒருவருக்கு மட்டும் தான் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது பெயர் முகமது ஃபர்வாஸ். இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுரை மத்திய சட்டசபை தொகுதியின் தவெகவின் எம்எல்ஏவான முஸ்தபாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
உதயநிதிக்கு ஆதரவாக..
முதல்வர் விஜய் இஸ்லாமியர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்தநிலையில் அதில் முதல் பெயராக முஸ்தபாவின் பெயர் இருந்துள்ளது. ஏனென்றால் இவர் தவெகவில் பிரபலமானவர். அதுமட்டுமின்றி மதுரை மத்திய தொகுதியில் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் இயக்குநர் சுந்தர் சி ஆகியோரை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் அவரது பெயர் கைவிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர் சனாதனம் பற்றி கூறிய கருத்து தான் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது 'சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று கூறினார். இது சர்ச்சையானது. இதுபற்றி சட்டசபையில் இருந்து வெளியே வந்த தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்க உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசினார்.
கைநழுவிய அமைச்சர் பதவி
இதுபற்றி முஸ்தபா,''நாங்களும் பெரியார் மற்றும் அம்பேத்கரை கட்சியின் அடையாளாக வைத்துள்ளோம். சனாதனத்தை ஒழிப்பதற்காக தான் களத்தில் இறங்கியுள்ளோம்'' என்றார். இவரது கருத்தும் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி இஸ்லாமியராக இருக்கும் அவர் எப்படி சனாதனத்தை ஒழிப்போம் என்று பாஜக உள்பட இந்துத்துவா அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து முஸ்தபா, ''நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் இல்லை'' என்று விளக்கம் அளித்தார்.
இருப்பினும் கூட அவரது சனாதனம் ஒழிப்பு தொடர்பான பேச்சு தொடர்ந்து சர்ச்சையாகி வந்தது. இதனால் முஸ்தபாவிற்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது சிக்கலை ஏற்படுத்தலாம். தேவையின்றி அரசு சர்ச்சையில் சிக்கும் என முதல்வர் விஜய் நினைத்து அவரது பெயரை கடைசி நேரத்தில் 'டிராப்' செய்து அறந்தாங்கி எம்எல்ஏவான முகமது ஃபர்வாஸ்க்கு அமைச்சர் பதவியை வழங்கி உள்ளார்.
பிடிஆர் - சுந்தர் சி வீழ்த்தி வெற்றி
முன்னதாக முஸ்தபா தற்போது வென்றுள்ள மதுரை மத்திய தொகுதியில் கடந்த 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர் திமுகவின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இவர் மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கியிருந்தார்.
இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பில் இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி மற்றும் தவெகவில் முஸ்தபா ஆகியோர் களமிறங்கினர். தேர்தல் பிரசாரத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - சுந்தர் சி இடையே கடும் கருத்து மோதல் இருந்தது. இவர்கள் 2 பேரில் ஒருவர் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்தது.
ஓட்டு வித்தியாசம் எவ்வளவு?
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - சுந்தர் சி ஆகியோரை வீழ்த்தி தவெகவின் முஸ்தபா அமோக வெற்றி பெற்றார். மதுரை மத்திய தொகுதியில் முஸ்தபா மொத்தம் 63,414 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். இவர் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த பிடிஆர் பழனிவேல் (பெற்ற ஓட்டுகள் 44,286) தியாகராஜனை 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதி கட்சி சார்பில் களமிறங்கிய இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி 33,538 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு!












Click it and Unblock the Notifications