Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கசியவே கூடாது.. ஸ்டாலின் போட்ட "அந்த" ஆர்டர்.. 2 மாஜிக்களை வளைத்த "கந்தசாமி".. டாப் சீக்ரெட் பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, விஜயபாஸ்கர் இரண்டு பேர் வீடுகளிலும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இந்த ரெய்டு மிகவும் சீக்ரெட்டாக பிளான் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த போதே அதிமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.

இவர் மிகவும் ஸ்டிரிக்ட் அதிகாரி. போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத்தில் அமித் ஷாவையே கைது செய்த அதிகாரிதான் கந்தசாமி. அந்த அளவிற்கு ஸ்டிரிக்ட் அதிகாரியை தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்தது பெரிய கவனம் பெற்றது.

இந்த நிலையில் வரிசையாக பல்வேறு அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. ஏற்கனவே எஸ்.பி வேலுமணி வீட்டிலும், விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டுகள் நடத்தப்பட்டன.

எஸ்.பி வேலுமணி

எஸ்.பி வேலுமணி

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்தது .

கசிந்த தகவல்

கசிந்த தகவல்


ஆனால் அப்போது அந்த ரெய்டு விஷயம், மேலிடத்தில் இருந்த சில அதிகாரிகள் மூலம் வேலுமணிக்கு தெரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் கோப்புகள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் கோபம் அடைந்த ஸ்டாலின் சில "கருப்பு ஆடுகளை" உடனே வேறு துறைகளுக்கு மாற்றியதாகவும் தகவல்கள் வந்தன. இந்த நிலையில்தான், கடந்த மார்ச் 15ம் தேதி மீண்டும் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் ரெய்டு நடைபெற்றது. சென்னையில் மட்டும் மொத்தம் 8 இடங்களில் ரெய்டு நடந்தது. கோவையில் 41 இடங்களில் ரெய்டு நடந்தது.

இரண்டாவது வழக்கு

இரண்டாவது வழக்கு

இதில் வேலுமணி மீது இரண்டாவது வழக்கும் பதியப்பட்டது. இவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக 58.23 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமைச்சராக இருந்த போது முறைகேடாக சொத்து சேர்த்ததாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி உத்தரவின் பெயரில் ரெய்டு நடக்கிறது, 5 மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி பல்புகள் ஆக மாற்றியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இவர் மீது புகார் உள்ளது.

புகார்

புகார்

சந்தை விலையை விட அதிக விலைக்கு இவர் பல்புகளை வாங்கியதாக புகார் வைக்கப்பட்டு, அது தொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு இதில் 74 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் தெரிய வந்துள்ளது. அவருக்கு சொந்தமான 45 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. முன்னதாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு பதியப்பட்டது. சி.விஜயபாஸ்கர் மனைவி மீதும் வழக்கு பதியப்பட்டது.

இரண்டாவது ரெய்டு

இரண்டாவது ரெய்டு

2016க்கு பின் 27 கோடி ரூபாய் வரை இவர் முறைகேடாக சொத்து சேர்த்து இருக்கிறார் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. 5 வருடத்தில் பல்வேறு முறைகேடான ஒப்பந்தங்கள், லஞ்சங்கள் மூலம் இவர் இந்த சொத்துகளை குவித்து இருக்கலாம் என்று எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அவர் வீட்டில் மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. ஊத்துக்கோட்டையில் கட்டப்பட்டு வந்த வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு, அது கட்டப்படும் முன்பே முழுமையாக செயல்படும் சான்றை கொடுத்துள்ளதாக இவர் மீது புகார் வகுக்கப்பட்டு உள்ளது.

புகார்

புகார்

இதில் ஊழல் நடைபெற்று உள்ளதாக 13 இடங்களில் ரெய்டு நடக்கிறது. இந்த இரண்டு ரெய்டுகளும் ஒரே நேரத்தில் நடக்கும் என்று அதிமுக தரப்பு எதிர்பார்க்கவே இல்லையாம். முதல்வர் ஸ்டாலின் - டிஜிபி கந்தசாமி - சில உயர் அதிகாரிகள் தவிர யாருக்கும் தெரியாமல் மிக சீக்ரெட்டாக இந்த பிளான் போடப்பட்டுள்ளது என்கிறார்கள். தகவல் கசியவே கூடாது என்று ஸ்டாலினும் கண்டிப்பாக உத்தரவிட்டு இருக்கிறாராம். இந்த ரெய்டில் மொத்தம் 400 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் கூட இன்று அதிகாலைதான் ரெய்டு பற்றிய தகவலே தெரியும் என்றும் கூறப்படுகிறது,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+