Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளைமாக்ஸ் நெருங்குகிறது.. "அவங்க"தான் காரணமா.. ஓபிஎஸ் போட்ட கண்டிஷன்.. என்னாச்சு?

எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் ஷாக் தந்துள்ளார் ஓ பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுக்குள் புதிய சிக்கல் எழுந்துள்ளது.. பிரச்சனையை கிளப்புபவர் ஓபிஎஸ், அதை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் செய்திகள் பரபரக்கின்றன.

ஓபிஎஸ் 3 முறை அமைச்சராக இருந்தபோது, அதே அமைச்சரவையில், அமைச்சராக அமர்ந்திருந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், இன்றைக்கு ஓபிஎஸ்ஸை தாண்டி அவரது விஸ்வரூபம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே போகிறது.

அதனால்தான், எடப்பாடியால் அதிமுகவில் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் தலைவர்களில் டாப் இடத்தில் தொடர்ந்து நீடித்து வர முடிகிறது..

விவாதங்கள்

விவாதங்கள்

முதல்வராக இருந்தபோது, இந்த செல்வாக்கு வரலாம் என்றாலும், ஆட்சி முடிந்தும் அதே கெத்தை தக்க வைத்து கொள்வது மிகவும் சிரமமான விஷயம்தான்.. இத்தனைக்கும் 3 விதமான பிரச்சனைகள் அந்த கட்சிக்குள் தலைதூக்கவே செய்தன. முதலாவதாக, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கான பதிலை தமிழகமே அன்று ஆவலுடன் எதிர்பார்த்தது.. இந்த முறை தனக்கான இடத்தை விட்டுவிடக்கூடாது என்று ஓபிஎஸ்ஸூம் எவ்வளவோ முயன்றார்.. இறுதியில் எடப்பாடியே முதல்வர் வேட்பாளரானார்..

 கொங்கு வெற்றி

கொங்கு வெற்றி

அதேபோல, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பிரச்சனை உருவெடுத்தது.. இந்த பதவியானது கிட்டத்தட்ட எம்பி பதவி போலதான்.. நடந்து முடிந்திருந்த சட்டசபை தேர்தல் பிரச்சார சமயத்தில் கொங்குவை பலப்படுத்தி வைத்ததாலோ என்னவோ, கொங்குவின் வெற்றியை காட்டியே சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார்.. இதற்கும் ஓபிஎஸ் மல்லுக்கட்டினார்.. கோபித்து கொண்டு தேனி பண்ணை வீட்டுக்கே போய் உட்கார்ந்து கொண்டார்.. ஆனாலும் சாதித்தது என்னவோ வழக்கம்போல் எடப்பாடிதான்.

 பண்ணைவீடு

பண்ணைவீடு

அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக மண்ணை கவ்விய நிலையில், மீண்டும் ஒற்றை தலைமை என்ற பேச்சு அளவுக்கு அதிகமாக வெடித்து வரும் நிலையில், மீண்டும் தன் ஆளுமையை நிரூபித்து உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதாவது, உள்ளாட்சி தேர்தலில் கொங்கு உட்பட சரிந்தும், தேனி மாவட்ட அதிமுக தீர்மானம் போட்டும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தம்பியையே தூக்கியடித்தார் என்றால் எடப்பாடி ஜெயலலிதா பாணியில் கட்சியை கட்டுக்குள் வைத்துள்ளர் என்ற ஆச்சரியத்தை கிளப்பிவிட்டார்.

 எடப்பாடி சுரீர்

எடப்பாடி சுரீர்

எந்த விஷயத்தையும் ஓபனாக பேசாமலேயே, பேச வேண்டிய நேரத்தில் அமைதி ஓபிஎஸ்.. எந்த விஷயத்திலும் உறுதிப்பாடு குறைவாக இருப்பவர் என்ற விமர்சனம் இருக்கிறது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அப்படி இல்லை.. டாண்..டாண்.. என எதிரிகூடாரத்தையும் வார்த்தைகளாலேயே நொறுக்குபவர்.. சொந்த கட்சியிலும் சசிகலா விஷயத்தில் கறார் தன்மையை கடைப்பிடித்து வருவதிலும், தன்னுடைய ஆதரவாளர்கள் யாரையுமே இதுவரை சசிகலா பக்கம் அணுகவிடாமல் இறுக்கமாக தன்பிடிக்குள் வைத்திருப்பதிலுமே எடப்பாடியின் ஆளுமை நிரூபணமாகி கொண்டே இருக்கிறது.

 கண்டிஷன்கள்

கண்டிஷன்கள்

இதெல்லாம் ஓபிஎஸ்ஸை கடுமையான அதிருப்திக்கு உள்ளாக்கியதாலோ என்னவோ, இன்னொரு பிரச்சனை வெடித்துள்ளது.. அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில், ஓபிஎஸ் திடீரென சில கண்டிஷன்களை போட்டுள்ளாராம்.. அதனால்தான் தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.. கடந்த மாத இறுதியில், 25 மாவட்டங்களில், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகளை தேர்வு செய்ய, தேர்தல் அறிவிக்கப்பட்டு, கட்சியினரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன...

 கையெழுத்து

கையெழுத்து

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர் லிஸ்ட்டை அறிவிக்க வேண்டும்.. அதேபோல போட்டி உள்ள இடங்களில் தேர்தலையும் நடத்த வேண்டும்.. அடுத்து மிச்சமுள்ள மாவட்டங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.. இதுதான் நடைமுறை.. இது தொடர்பாக ஒப்புதல் பெறுவதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான் கையெழுத்து போட வேண்டும்.. அதற்காக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடிதமும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. ஆனால், கையெழுத்து போடாமல் உள்ளாராம் ஓபிஎஸ்.

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

காரணம், மாவட்ட செயலர்களை முடிவு செய்த பிறகு, அடுத்தகட்ட தேர்தலை அறிவிப்போம் என்று ஒரே போடாக போட்டாராம்.. சில மாவட்ட செயலர்களை மாற்றி விட்டு, தன்னுடைய ஆதரவாளர்களையும் நியமிக்க வேண்டும், அப்போதுதான் கையெழுத்து போடுவேன் என்று அடுத்த கண்டிஷனை போடுகிறாராம்.. இதை பற்றியெல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி தரப்பினர் சொல்லும் சமாதானம் ஆகவில்லையாம்..

 சசிகலா அழுத்தம்

சசிகலா அழுத்தம்

எப்ப பார்த்தாலும் இப்படிதான் சொல்லுறீங்க.. என்னை சமாதானப்படுத்திட்டு, என் ஆதரவாளர்களையும் கண்டுகொள்வதில்லை என்று வெடிக்கிறாராம் ஓபிஎஸ்.. இதை பார்த்துதான் எடப்பாடி தரப்புக்கு செம ஷாக் ஆகி உள்ளது.. இவர் ஏன் இப்படி திடீர் பல்டி அடிக்கிறார், ஒருவேளை இதன் பின்னணியில் சசிகலாவின் அழுத்தம் இருக்குமோ என்ற சந்தேமுகம் எடப்பாடி டீமுக்கு ஏற்பட்டுள்ளதாம்..

 எடப்பாடி ஷாக்

எடப்பாடி ஷாக்

அதாவது, தேர்தல் ஆணையத்திடம், புதிய நிர்வாகிகள் லிஸ்ட் தரப்பட்டு விட்டால், சசிகலாவுக்கு கதவு அடைக்கப்பட்டு விடும் என்பதாலேயே ஓபிஎஸ் இப்படி முரண்டுபிடிப்பதாக சந்தேகம் கிளம்பி உள்ளதாம்.. இதனால் 2ம் கட்ட உட்கட்சி தேர்தலை நடத்த முடியாமல் அதிமுக மேலிடம் கையை பிசைந்து நிற்கிறதாம்... எனினும் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கி உள்ள நிலையில், இதற்கெல்லாம் ஒரு முடிவு கிடைத்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+