இது வடஇந்தியர்களின் தனி உலகம்.. சென்னை மத்திய அரசு அலுவலகத்தில் புலம்பும் பெண் ஊழியர்.. என்னாச்சு?
சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் வடஇந்தியர்கள் அதிகமாக பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்துக்கு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் புதிதாக பணிக்கு சேர்ந்தார். வடஇந்தியர்கள் அதிகம் இருந்ததால் முதலில் அவர் ஹேப்பியானார். ஆனால் இப்போது வடஇந்திய மத்திய அரசு ஊழியர்களால் அவர் வித்தியாசமான பிரச்சனையை எதிர்கொண்டு வரும் நிலையில் அதுபற்றி புலம்பி தள்ளியுள்ளார். ஹிந்தி மொழி, மீன் சாப்பாடு என ஒவ்வொரு விஷயத்தையும் வடஇந்தியர்கள் கேள்வி கேட்பதால் அவர் நொந்துப்போய் உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் சமீபத்தில் மத்திய அரசு பணியில் சேர்ந்தார். சென்னையில் உள்ள மத்திய அரசின் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட்டார். சென்னை அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த உடன் வடஇந்தியர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்? என்பதை அவர் கணக்கெடுத்தார்.

அப்போது அலுவலகத்தில் அதிகளவில் வடஇந்தியர்கள் தான் பணியாற்றி வந்தனர். இதனால் அவர் ஹேப்பியானார். மொழிப்பிரச்சனை இருக்காது. தானும் வடஇந்தியாவை சேர்ந்தவர் என்பதால் எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைத்தார். ஆனால் அலுவலகத்தில் நடந்ததோ வேறு. வடஇந்திய ஊழியர்களால் அவர் வித்தியாசமான பிரச்சனையை எதிர்கொண்டார்.
குறிப்பாக மொழிப்பிரச்சனையை சந்தித்தார். இளம்பெண் பெங்காலி மொழியை தாய்மொழியாக கொண்டவர். மீன் சாப்பிடும் வழக்கம் கொண்டவர். இதனை எல்லாம் குறிப்பிட்டு ஹிந்தி மொழி பேசும் வடஇந்தியர்கள் அவரை சீண்ட தொடங்கி உள்ளனர். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
இதுதொடர்பாக அந்த பெண் ஊழியர், போட்ட பதிவு ‛ரெடிட்' தளத்தில் வைரலானது., ‛‛ஹிந்தி மொழி பேசும் மக்கள் தனி உலகில் வாழ்கிறார்கள். ஆனால் இதை பொதுமைப்படுத்த விரும்பவில்லை'' என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியுள்ளதாவது:
‛‛நான் கொல்கத்தாவை சேர்ந்தவள். சமீபத்தில் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தேன். முதலில் எவ்வளவு வடஇந்தியர்கள் பணியாற்றுகின்றனர் என்பதை தான் நான் கவனித்தேன். அரசாங்க பணியில் அவர்கள் சேர்வது பெருமையாக நினைப்பார்கள் என்பதால் அதனை கவனிக்க தொடங்கினேன். நான் அதிகமாக வடஇந்தியர்களுடன் பேச தொடங்கினேன். அப்போது தான் மேற்கு வங்க மாநிலத்தை ஒப்பிடும்போது அவர்களின் கலாசாரம் எவ்வளவு வித்தியாசமானது என்பதை உணர்ந்தேன்.
ஜாதி வெறி, வரதட்சணை கேட்பது, பெண் வெறுப்பு, பாலின பாகுபாடு தொடர்பாக வெளிப்படையாக பேசினர். இதுவெல்லாம் எனக்கு புதிதாக இருந்தது. ஒவ்வொரு நாளும் என் நாட்டை பற்றி நான் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த முழு அனுபவத்தின் உச்சம் இந்த குறிப்பிட்ட சம்பவம்தான்
மேலும் நான் எனது தாய்மொழியான பெங்காலி பேசும் 2 நண்பர்களுடன் பேசினேன். அப்போது காசியாபாத்தை (உத்தரபிரதேசம் மாநிலம்) சேர்ந்த சக ஊழியர், நீங்கள் வீட்டிலும் பெங்காலி மொழியில் தான் பேசுவீர்களா? என்று கேட்டார். அதற்கு, ‛ஆம், எங்களின் தாய்மொழி பெங்காலி. அதனால் வீட்டிலும் பெங்காலி மொழியில் தான் பேசுவோம்' என்றேன். அதற்கு, ‛‛இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஹிந்தி தெரியும். ஹிந்தியில் தான் பேசுவார்கள் என்று நான் நினைத்தேன்'' என்றார். நம் நாட்டில் உள்ளவர்களுக்கு இந்தி மட்டுமே தாய்மொழி இல்லை. பலருக்கும் வேறு மொழி தாய்மொழியாக இருக்கிறது என்பதை அந்த நபர் அறிந்து வைத்திருக்கவில்லை. இது அதிர்ச்சியளித்தது.
அதேபோல் அந்த பெண் தீபாவளிக்கு வீட்டுக்கு செல்லவில்லை என்பது பற்றி கேட்டனர். அதற்கு துர்கா பூஜைக்கு செல்வேன் என்று கூறினார். அப்போது அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேற்கு வங்கத்தில் தீபாவளியை விட துர்கா பூஜையை தான் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என அறிந்து வைக்கவில்லை. அதேபோல் சைவம், அசைவம் தொடர்பான விஷயத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் துர்நாற்றம் அடிக்கும் மீனை எப்படி சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கின்றனர்.
நம் நாடு மொழி, கலாசாரத்தில் பன்முகதன்மை கொண்டுள்ளது. இவ்வளவு படித்து அரசு பணியில் உள்ளவர்கள் அதனை கூட தெரிந்து கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்? இது எனக்கு புரியவில்லை'' எனக்கூறி உண்மையில் ஹிந்தி பேசும் வடஇந்தியர்கள் உண்மையில் தனி உலகத்தில் வாழ்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவு வைரலாக தொடங்கியது. பலரும் தங்களின் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஒருவர், ‛‛வடஇந்தியர்கள் இன்னும் அறியாமையில் உள்ளனர்'' என்று கூறினார். அதேவேளையில் பலரும் இந்த பதிவை விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து அந்த பதிவு டெலிட் செய்யப்பட்டது. இருப்பினும் ஸ்கிரீன்ஷாட் இணையதளங்களில் பரவி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications