"சாணக்கியத்தனம்..". கிடைத்த சான்ஸ்களை பக்காவாக பயன்படுத்தி பலப்படுத்திய எடப்பாடி, கோட்டைவிட்ட ஓபிஎஸ்

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 2022 ஜூலை 11 பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லும் எனவும் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி கடந்த 5 ஆண்டுகளில் அதிமுகவில் நடந்த சதுரங்க ஆட்டத்தில், குதிரை போன்று செயல்பட்டு சசிகலா, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை வெட்டி தூக்கியது அவரது ஆதரவாளர்களால் சிலாகித்து பேசப்படுகிறது. இது எப்படி நடந்தது என்பது பற்றிய தகவல் வருமாறு:

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு பூதாகரமாக எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுகவில் பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

அதோடு இந்த பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அமைந்தது.

 ஈபிஎஸ்க்கு வெற்றி

ஈபிஎஸ்க்கு வெற்றி

இதை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை மாதம் 11ம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஜூலை 11 பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் அவரது நீக்கத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது.

 ஓபிஎஸ்க்கு ஷாக்

ஓபிஎஸ்க்கு ஷாக்

இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாபெரும் வெற்றியாகும். மாறாக ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியினருக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த உற்சாகமாகி உள்ளார். அதேவேளையில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் ஷாக்கில் உள்ளனர். மேலும் ஓ பன்னீர் செல்வம் உள்பட அவரது அணியினரின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 எம்ஜிஆர், ஜெ.,வை தொடர்ந்து ஈபிஎஸ்

எம்ஜிஆர், ஜெ.,வை தொடர்ந்து ஈபிஎஸ்

அதிமுகவை தொடங்கி பொதுச்செயலாளராக இருந்த எம்ஜிஆரை தொடர்ந்து அதிமுகவில் அனைத்து அதிகாரங்களை கொண்ட தலைவராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திகழ்ந்தார். அவர் மறைந்த பிறகு ஜெயலலிதாவின் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம் சென்றது. இதையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட கலகத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்கம் செய்தனர். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். கடந்த ஆண்டும் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பொதுச்செயலாளர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானார். இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பும் அவரது தேர்வுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதன்மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போது எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற தலைவராக உருமாறி உள்ளார்.

 5 ஆண்டில் வளர்ச்சி

5 ஆண்டில் வளர்ச்சி

மேலும் தனக்கு போட்டியாக இருந்த ஓ பன்னீர் செல்வத்தை சாமர்த்தியாக அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். இதுவும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன்மூலம் அதிமுகவில் 60 எம்எல்ஏக்கள், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், 2,300க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா, தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். இந்நிலையில் தான் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ச்சி என்பது கடந்த 5 ஆண்டுகளாக மிக வேகமாக இருந்துள்ளது.அதுபற்றிய விபரம் வருமாறு:

 சசிகலா நீக்கம்

சசிகலா நீக்கம்

அதிமுக பொதுச்செயலாளராவும், தமிழ்நாடு முதல்வராகவும் ஜெயலலிதா இருந்த நிலையில் 2016 டிசம்பரில் மரணமடைந்தார். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் தான் முதல்வராக இருந்தார். கட்சியில் சசிகலா தற்காலிக பொதுச்செயலாளரானார். இந்த வேளையில் சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டால் ஓ பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை இழந்தார். இதனால் சசிகலா தனது மற்றொரு விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார். இவ்வாறு சசிகலா மூலம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை எட்டிப்பிடித்தார். . 2017 முதல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக செயல்பட தொடங்கினார். இவர் 2021 வரை முதல்வராக நீடித்தார். இதையடுத்து சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்தபோது எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியது.

 கட்சி தலைவராக தகவமைப்பு

கட்சி தலைவராக தகவமைப்பு

அதாவது ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர். இந்த வேளையில் ஓ பன்னீர் செல்வத்துக்கு 15க்கு உட்பட்ட எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதை எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த வேளையில் பாஜக சாமதானம் செய்த நிலையில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்த்தார். மேலும் ஓ பன்னீர் செல்வம் துணை முதல்வர் பதவியை பெற்றார் இருப்பினும் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தன்னை தொடர்ந்து கட்சியை வழிநடத்தும் தலைவராக தகவமைத்து கொண்டார்.

 ஓபிஎஸ்க்கு செக்

ஓபிஎஸ்க்கு செக்

மேலும் கட்சியில் தனக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதையும், அவர்களை தக்க வைக்கும் நுணுக்கத்தையும் எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியமாக பயன்படுத்த தொடங்கினார். 4 ஆண்டு ஆட்சியை முதல்வராக நிறைவு செய்த எடப்பாடி பழனிச்சாமி நல்ல முதல்வராகவும், நல்ல தலைவராகவும் கட்சியினரிடையே தனது அந்தஸ்தை உயர்த்தி கொண்டார். அதன்பிறகு கடந்த ஆண்டு பொதுச்செயலாளர் பதவி மீது கண்வைத்து சாமர்த்தியமாக செயல்பட்டு ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அவருக்கு செக் வைத்த நிலையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தான் விரும்பியதை எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஓபிஎஸ் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

ஓபிஎஸ் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

இதுபற்றி அதிமுக கட்சியினர் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி தனது முடிவில் மிகவும் தெளிவாக இருந்தார்.திடமான முடிவுகளை எடுப்பதில் அவர் தயங்கவில்லை. மாறாக ஓ பன்னீர் செல்வம் துணை முதல்வராக இருந்தபோதில் இருந்து பாஜக சார்பில் நிலையில் இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி யாருக்கும் அடிபணியவில்லை. ஓ பன்னீர் செல்வம் போல் அவர் பாஜகவிடம் நெருக்கம் காட்டவில்லை. அவர்களிடம் எந்த ஆலோசனைகளையும் பெறவில்லை. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அவர் வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் ஓ பன்னீர் செல்வம் அப்படியில்லை. பாஜகவிடம் பல ஆலோசனைகளை கேட்டார். துணை முதல்வர் பதவியை பெற்றது முதல் பல விஷயங்களை கூறலாம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில் கூட பாஜகவை சார்ந்து தான் இருந்தார். பாஜக வேட்பாளரை நிறுத்தினால் தனது வேட்பாளரை வாபஸ் வாங்குவதாக கூறி இது அவர் மீதான நம்பிக்கையை உடைப்பதற்கு முக்கிய காரணமாகும்.

 உறுதியற்ற தன்மை

உறுதியற்ற தன்மை

மேலும் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சசிகலா மற்றும் வெளிநபரான குரூமூர்த்தி ஆகியோருடன் ஓ பன்னீர் செல்வம் தொடர்பில் இருந்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பத்துக்கு நடுவே ஓ பன்னீர் செல்வத்தை, ஜெயலலிதாவின் நினைவிடம் செல்ல குரூமூர்த்தி தான் தெரிவித்திருந்தார். இப்படியாக கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஓ பன்னீர் செல்வத்தின் செயல்பாடு என்பது உறுதியற்ற தன்மையில் இருந்தது. இதனால் அவர் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டதோடு, எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ்க்கு சாதகம் இருக்கா?

ஓபிஎஸ்க்கு சாதகம் இருக்கா?

இருப்பினும் கூட நிலுவையில் உள்ள சிவில் வழக்கை ஓ பன்னீர் செல்வம் தரப்பு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் கூறியுள்ளது. இதனை ஓ பன்னீர் செல்வம் செய்தாலும் கூட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்குப்போல் அது ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. இறுதியிலும் கூட தீர்ப்பு சாதகமாக வரும் என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர். இதனால் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்றுவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+