7 ஆண்டுக்கு முன் மாயம்! தாம்பரத்தில் கிளம்பிய ஏஎன்32 விமான பாகம் சென்னை கடலில் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டு சென்ற ஏஎன் 32 ரக விமானப்படை விமானம் 29 வீரர்களுடன் மாயமான நிலையில் அதன் பாகம் 7 ஆண்டுகளுக்கு பிறகு கடலுக்கடியில் மூன்றரை கிலோமீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பாகம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது, இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன
2016.. ஜூலை 22ம் தேதி.. சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக சரக்கு விமானம் புறப்பட்டது. அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி இந்த விமானம் பறந்தது.

இந்த விமானத்தில் மொத்தம் 29 பேர் பயணம் செய்தனர். விமான ஊழியர்கள் 6 பேர், விமானப்படை ஊழியர்கள் 11 பேர், 2 ராணுவ வீரர்கள், ஒரு கடற்படை வீரர், ஒரு கப்பல் மாலுமி, 8 கப்பல் படை ஊழியர்கள் என மொத்தம் 29 பேர் பயணித்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே செம்பூரை சேர்ந்த முத்துகிருஜ்ணன் என்ற கடலோர பாதுகாப்பு படை வீரரும் சென்றார்.
இந்த விமானம் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட 15வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானம் எங்கு சென்றது? என்ன ஆனது என்பது தெரியவில்லை. இருப்பினும் தகவல் தொடர்பை இழந்தபோது அந்த விமானம் சென்னைக்கு கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவில் வங்களா விரிகுடா கடலுக்கு மேல் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கருதப்பட்டது. இதையடுத்து விமானத்தை கடலில் தேடும் பணி தொடங்கியது.
இந்த தேடுதல் பணியில் டார்னியர் விமானங்கள், கடற்படையின் நவீன தொழில்நுட்பம் கொண்ட விமானம், 13 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஈடுபட்டன. 2 மாதம் வரை தேடும் பணி தொடர்ந்த நிலையில் மாயமான விமானம் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து விமானத்தை தேடும் பணி கைவிடப்பட்டது. அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் 7 ஆண்டுகளுக்கு பிறகு 29 வீரர்களுடன் மாயமான ஏஎன் 25 ரக விமானத்தின் பாகம் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே 310 கிலோமீட்டர் தொலைவில் கடலில் மூன்றரை கிலோமீட்டர் ஆழத்தில் இந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் அந்த பாகம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் என்பது செயல்பட்டு வருகிறது. இந்த நிறவனம் கடல்வளம், கடலுக்கு அடியில் உள்ள கனிமவளம், கடலுக்குள் ஏற்படும் மாற்றம் உள்ளிட்டவை பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஏயூவி (Autonomous Underwater Vehicle) எனும் இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. இந்த இயந்திரம் கடலுக்கடியில் என்ன இருக்கிறது? என்பதை தேடும் கருவியாகும்.
இதில் மல்டி பீம் சோனார், கடலுக்கடியில் இருப்பதை புகைப்பிடிக்கும் கேமரா உள்ளிட்டவை இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ஏயூவி இயந்திரம் மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடலுக்கடியில் மூன்றரை கிலோமீட்டர் தூரத்தில் ஏஎன் 32 ரக விமானத்தின் பாகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது மாயமான விமானத்தின் வழிபாதையில் கடலுக்கடியில் சிக்கி இருப்பதும், அதோடு இந்த இடத்தில் வேறு விமானங்கள் ஏதுவும் விபத்தில் சிக்கவில்லை என்பதால் கிடைத்த பொருள் என்பது ஏஎன் 32 ரக விமானத்தின் பாகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இந்த விமானத்தின் பாகம் கிடைத்துள்ள நிலையில் தொடர்ந்து அங்கு ஆய்வு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் விமானத்தின் பிற பொருட்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. பொதுவாக விமானத்தில் கருப்பு பெட்டி என்பதில் தான் விமானிகள் பேசும் உரையாடல்கள் குறித்த விபரங்கள் இடம்பெறும். கருப்பு பெட்டி கிடைத்தால் கடைசி நிமிடத்தில் விமானிகள் என்ன கூறினார்கள்? விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்த முக்கிய தகவல் கிடைக்கும். இந்நிலையில் தான் தற்போது இந்த பாகம் கிடைத்த இடத்தில் கருப்பு பெட்டி உள்ளதா? என்பது பற்றிய ஆய்வை தொடங்க வாய்ப்புள்ளது. இதுபற்றி தற்போது ராணுவம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications