இந்த "2 மேட்டர்"தான் சிக்கல்.. அதிமுகவை விடாமல் நெருக்கும் பாஜக.. எப்படி சமாளிக்கும்..?

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் மிக முக்கியமான விஷயம் ஒன்று கசிந்து வருகிறது.. அதன்படி, அதிமுகவின் வலுவான தொகுதிகள் சிலவற்றை பாஜகவும் கேட்டு வருகிறதாம்!

விரைவில் தேர்தல் வர உள்ளநிலையில், அனைத்து கட்சிகளுமே களத்தில் தீவிரமாக இறங்கிவிட்டன.. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு, சீட் விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்தும் மறைமுக பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன.

இதில் அதிமுக தற்போது எந்த மனநிலையில் இருக்கிறது என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறி வருகிறது.. இப்போதைக்கு அதிமுகவை பொறுத்தவரை 2 சிக்கல்கள் இருக்கிறதாம்.. ஒன்று, ரஜினியை எப்படி எதிர்கொள்வது என்பது.

 திமுக

திமுக

இதற்கு காரணம், ரஜினி வருகையால் அதிக அளவு திமுகவுக்கே பாதிப்பு என்று பாஜக தலைவர்கள் சொல்லி வந்தாலும், ரஜினி வருகை அதிமுகவுக்கும் கலக்கத்தை தந்து வருகிறதாம்.. காரணம் திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கும், அதிமுக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கும்தான் இதுவரை போய் கொண்டிருந்தது. தற்போது அந்த இரண்டும் அப்படியே ரஜினிக்குப் போக வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் அது சம்பந்தமாக ஒரு சர்வேயை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டதாக ஒரு செய்தி கசிந்தது. எனவே, ரஜினி வருகை என்பது அதிமுகவுக்கு தலைவலியாக மாறியுள்ளதாம்.

 அதிக சீட்

அதிக சீட்

மற்றொரு விஷயம், பாஜக சீட்டுகளை கேட்டுக் கொண்டிருந்தாலும், அவை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.. அமித்ஷா வந்தபோது சீட் சம்பந்தமான பேச்சுவார்த்தை எழுந்ததாகவும், ஆனால், அதற்கு அதிமுக தலைமை பிடிகொடுத்து பேசவில்லை என்றும் கூறப்பட்டது.. இப்போதும் அதே 60 சீட் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது போல தெரிகிறது.. அதுமட்டுமல்ல, தங்களுக்கு சாதகமான தொகுதிகள் சிலவற்றையே பாஜகவும் கேட்கிறதாம். இதுதான் அதிமுகவுக்கு ஷாக்கை தந்துள்ளதாக சொல்கிறார்கள்.

 கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

எப்படியும் 60 சீட்டுகள் தருவது சாத்தியமிருக்காது என்கிறார்கள்.. பாஜகவுக்கே 60 தந்துவிட்டால், மற்ற கூட்டணிகளுக்கு சீட் ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.. அந்த வகையில் குறைந்த எண்ணிக்கையில் சீட் தந்தாலும், பாஜக கேட்கும் தொகுதியை விட்டுத்தருவதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். உதாரணத்துக்கு கோவை மண்டலத்தை பாஜக ஒதுக்க சொல்லி கேட்கும்..

 எடப்பாடியார்

எடப்பாடியார்

ஆனால், இந்த முறை கொங்கு மண்டலம் மொத்தத்திலும் அதிமுக வலுவாக உள்ளது.. இன்னும் சொல்லபோனால், முதல்வரே, எடப்பாடியை விட்டுவிட்டு, இந்த முறை கோவை மண்டலத்தில் போட்டியிடலாம் என்று சில தினங்களுக்கு முன்புகூட உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவித்தன. அந்தஅளவுக்கு கொங்கு மண்டலத்தில் அதிமுக ஸ்டிராங்காக உள்ளபோது, கோவையை எப்படி விட்டுத்தரும் என்பதே கேள்வி.... இப்படி ஒரு தொகுதி என்றில்லை, சில முக்கியமான அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளையே பாஜகவும் குறி வைத்து வருவதால், இரட்டிப்பு சிக்கலில் அதிமுக தலைமை தவித்து வருவதாக கூறப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+