சீமான் காவலாளி கைகளில் துப்பாக்கி வந்தது எப்படி? கைதான அமல்ராஜ்.. லைசன்ஸை ஆய்வு செய்யும் போலீஸ்!
சென்னை: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சீமானின் காவலாளி கைகளில் துப்பாக்கி இருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அதற்கான உரிமம் சரியாக இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
நடிகை பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று போலீசார் விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சீமானின் காவலாளி போலீசாரை தாக்கியதோடு கையில் இருந்த துப்பாக்கியையும் எடுத்து நீட்டியுள்ளார். இதன்பின் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார், கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனிடையே சீமானின் வீட்டில் இருந்த காவலாளியின் கைகளில் துப்பாக்கி வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
சம்மன் எதற்கு?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை ஒருவர் 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் காவல் துறை தரப்பில் ஐபிசி 376வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்த புகாரை நடிகை திரும்ப பெற்றாலும், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய முடியாது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் 12 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
சீமானுக்கு சம்மன்
இதன்பின் வழக்கு விசாரணைக்காக சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது.
காவலாளி - போலீஸ் மோதல்
அந்த சம்மனை சீமான் வீட்டின் கதவில் போலீசார் ஒட்டிய போது, மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பேரில் சில நிமிடங்களிலேயே அதனை கிழித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், சம்மனை கிழித்தது யார் என்று கேட்டு கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது போலீசாரை உள்ளே அனுமதிக்க மறுத்த சீமானின் காவலாளி அமல்ராஜ், போலீசார் உடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
துப்பாக்கியை நீட்டிய காவலாளி
அப்போது போலீசாரை தள்ளிவிட்ட காவலாளி அமல்ராஜ், தன்னிடம் இருந்த கை துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி நீட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக காவலாளியை 2 பேர் சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். அதேபோல் காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கி இருந்தது எப்படி?
இதனிடையே காவலாளி அமல்ராஜ் முன்னாள் ராணுவ வீரர் என்பதால் அவரின் கைகளில் கை துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் கையில் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி உண்டு. அதற்கான உரிய அனுமதி கடிதம் கொடுத்துதான் துப்பாக்கியை பெற்று கொள்ள வேண்டும். ஆனால் அந்த துப்பாக்கியை காவலர்களுக்கு எதிராக நீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications