உஷார் மக்களே.. சைரஸ் மிஸ்திரி சம்பவம்.. சீட் பெல்ட் அணியாவிட்டால் ஏர் பேக் ஓபன் ஆகாதா?
சென்னை: டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததால் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், சீட் பெல்ட் எப்படி உயிர்காக்கும்? அதற்கும் ஏர் பேகிற்கும் என்ன தொடர்பு? என்பதை காண்போம்.
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று முந்தினம் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதுகாப்பான பென்ஸ் காரில் சென்று அவர் இறந்ததற்கு சீட் பெல்ட் அணியாததே காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், லோக்கல் சர்கிள் என்ற நிறுவனம், 10,000 பேரிடம் காரில் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக ஒரு வாக்கெடுப்பை மேற்கொண்டது.

சீட் பெல்ட் அணியாத இந்தியர்கள்
அதில், 26 சதவீதம் பேர் மட்டுமே காரின் பின் இருக்கையில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதாக தெரிவித்துள்ளார்கள். இவர்களில் 4 சதவீதம் பேர் காரின் பின் இருக்கையில் இதுவரை அமர்ந்து சென்றதில்லை என்று கூறி இருக்கின்றனர். 70 சதவீதம் மக்கள் காரின் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும்போது சீட் பெல்ட் அணிந்ததில்லை என்று தெரிவித்து உள்ளார்கள்.

ஏர் பேக்
பட்ஜெட் கார்கள் தொடங்கி விலை உயர்ந்த சொகுசு கார்கள் வரை விலைக்கு ஏற்ப அதில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருக்கும். அதில் முக்கியாமானது ஏர் பேக். பெரும்பாலான கார்களில் விலைக்கு ஏற்ப ஏர்பேக்குகளின் எண்ணிக்கை இருக்கும். கார் விபத்துக்கு உள்ளாகும்போது ஏர்பேக் சில மைக்ரோ வினாடிகளுக்குள் பயணிகள் மீது விழுந்து உயிர் காக்கும்.

சீட் பெல்ட் ஏன் முக்கியம்?
இதற்கும் சீட் பெல்டுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். சீட் பெல்டும் ஏர் பேக்கும் ஒன்றாக செயல்படுபவை. இரண்டுக்கும் எலெக்டிரானிக் தொடர்பு இல்லை. வேறொரு காரணம் உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்களில் இரண்டு ஏர் பேக்குகளும், அனைத்து இருக்கைகளில் சீட் பெல்டுகளும் இருக்கும். ஏர் பேக்குகள் இயங்குவதற்கு என சில சென்சார்கள் உள்ளன. சீட் பெல்டுகள் அணிந்து ஒருவர் அமர்ந்திருப்பதை கணக்கில் கொண்டே இந்த சென்சார்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன.

உயிர் காப்பான்
விபத்து ஏற்படும்போது முகம், நெஞ்சு, தலை பகுதியை பாதுகாக்க ஏர் பேக் பயணிகள் மீது விழுந்து அழுத்தம் கொடுக்கும். அதே நேரம் சீட் பெல்ட் நாம் நகராமல் அதே இடத்தில் இருக்க உதவும். சீட் பெல்டு அணியாவிட்டால் கார் மோதும்போதோ, கவிழும்போதோ, உருளும்போதோ நாம் சீட்டிலிருந்து நகர்ந்து வேறு இடத்தில் விழுந்து படுகாயமடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஏர் பேக் பயணிகள் மீது விழாமல் போகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றனர். சீட் பெல்ட் அணிந்தால் இதை தவிர்த்து ஏர் பேக் உதவியுடன் உயிரை காக்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications