"இவர்" லிஸ்ட்லேயே இல்லையே.. சென்னையிலிருந்து கொச்சிக்கு எப்படி சென்றார் அசோக்குமார்? ED குழப்பம்!
சென்னை: சென்னையிலிருந்து கொச்சிக்கு செந்தில் பாலாஜியின் தம்பி எப்படி சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் இருந்த போது அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக்குமார், அமைச்சரின் உதவியாளர் சண்முகம் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அசோக்குமாரின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் அந்த ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அசோக்குமாருக்கு அமலாக்கத் துறை 4 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் நெஞ்சு வலி என சாக்கு போக்கு சொல்லி ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவருடைய மனைவி பெயரில் கரூரில் சொகுசு வீடு கட்டப்பட்டு வருவதால் அதில் உள்ள நில மோசடி குறித்து விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவரும் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் அந்த நிலத்தின் மதிப்பு ரூ 30 கோடி என்றும் அதை வெறும் ரூ 10 லட்சத்திற்கு அசோக்குமார் தரப்பு வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த அந்த நிலத்தை தனது மகளுக்கு கொடுக்க அசோக்குமாரின் மாமியாருக்கும் சம்மன் அனுப்பிய நிலையில் அவரும் ஆஜராகாததால் அந்த கரூர் சொகுசு வீட்டை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர். இந்த நிலையில் கொச்சியில் பதுங்கியிருந்த அசோக்குமாரை நேற்று கேரளா போலீஸார் கைது செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவர் சென்னையிலிருந்து கொச்சிக்கு எப்படி சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விமானத்தில் பயணித்திருந்தால் விமான பயணிகளின் பட்டியலில் அசோக்குமாரின் பெயர் இருந்திருக்கும். ஆனால் அவரது பெயர் இல்லை. அப்படி இருக்கும் போது சாலை மார்க்கமாக கொச்சி சென்றாரா. இல்லாவிட்டால் ரயில் மூலமாக சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு வேளை சென்னையிலிருந்து கரூருக்கு வந்து அங்கிருந்து திண்டுக்கல் போய் கொடைக்கானல் வழியாக கேரளா சென்றடைந்திருப்பாரோ இல்லை யாராவது அவருக்கு உதவினார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications