Exclusive: தொழில் துறையில் புதிய பாதையில் செல்லும் தமிழ்நாடு.. இந்தியாவிலேயே டாப்.. ஜெயரஞ்சன் பேட்டி
சென்னை: சிப் தயாரிக்கும் ஒரு நாட்டில் ஏதாவது சிக்கல் என்றால் மொத்த உலகமே ஸ்தம்பித்து விடும் என்ற அபாயத்தை உணர்ந்து இப்போது பல இடங்களிலும் அதுபோன்ற உற்பத்தி செயல்பாடுகளை பெருக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதைக் குறி வைத்து தமிழ்நாடு தயாராகி வருகிறது என மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவரும், சமூக பொருளாதார அறிஞருமான ஜெ.ஜெயரஞ்சன், நமது ஒன் இந்தியாவின் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியில், தொழில் துறை முதலீடுகளை ஈர்க்கவும், Artificial Intelligence-ஐயும் எதிர்கொள்ள எப்படி தயராகிறது தமிழ்நாடு அரசு என்பது குறித்து விவரித்து இருக்கிறார்.

ஜெயரஞ்சன் பேசுகையில், "லண்டனில் இருந்து வெளிவரும் Financial Times-ல் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு எப்படி தொழில் துறையில் ஒரு புதிய பாதையை அமைத்து முன்னேறி வருகிறது என எழுதியுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதும், சீனாவில் இருந்து மட்டும் செயல்பட முடியாது, அதனை மட்டும் சார்ந்திருக்க முடியாது, உலகம் முழுவதும் இருந்து செயல்பட வேண்டும் என திட்டமிட்டு வருகின்றனர்.

தைவான் நாட்டில் சிப் தயாரிப்பு அதிகளவில் உள்ளது. தைவானுக்கும் சீனாவுக்கும் சண்டை என்றால், சிப் வருகையே அங்கிருந்து இருக்காது. சிப் வருகை தடைபட்டால் லேப்டாப், விமானங்கள், கார்கள் என எதுவும் இயங்காது. பல அலுவலகங்களில் கதவுகளே திறக்காது. வீடுகளில் மொபைல் போன், வாஷிங் மெஷினில் தொடங்கி, எல்லாமே சிப்களை சார்ந்து இருக்கிறது. சிப் தயாரிக்கும் ஒரு நாட்டில் ஏதாவது சிக்கல் என்றால் மொத்த உலகமே ஸ்தம்பித்து விடும் என்ற அபாயத்தை உணர்ந்து இப்போது பல இடங்களிலும் அதுபோன்ற செயல்பாடுகளை பெருக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்கள் அதனை குறி வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் அது பெரியளவில் சோபிக்கவில்லை. மொபைல் போன் உற்பத்தி என்பது மிகப்பெரிய தொழில் வளம் கொண்டது. இந்தச் சூழலில் தமிழ்நாடு அது சார்ந்து முதலீகளை ஈர்த்து வருகிறது.
குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஏராளமாக இருந்தாலும், அவை பெரும்பாலும் தானியங்கியாக இயங்கக்கூடியவை. வேலைவாய்ப்பு குறைவு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அதிகளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்தியாவிலேயே மிக அதிகமாக தொழில் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியாவின் தொழில் துறையில் வேலை செய்யும் பெண்களில் 40% பெண்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்." எனக் கூறி உள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications