பாக்ஸிங் தெரிந்தவர் ஆம்ஸ்ட்ராங்.. எப்படி வெட்டுவது என பக்கா ஸ்கெட்ச் போட்ட கொலையாளிகள்! கொடூரம்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது என பயங்கரமாக திட்டமிட்டு, அவரை திசைதிருப்பி அவரை நிலைகுலையச் செய்து அரிவாளால் வெட்டி தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார் ஆம்ஸ்ட்ராங். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.

இதில் படுகாயம் அடைந்த ஆர்ம்ஸ்ட்ராங் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தற்போது பிரேத பரிசோதன நிறைவடைந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலையொல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததால் அவரை பழிக்கு பழியாக கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆம்ஸ்ட்ராங்கை வீட்டின் அருகே வைத்து வெட்டிக் கொன்றது எப்படி என்பது குறித்தும் கொலையாளிகள் தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பது உட்பட பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்திருந்துள்ளனர். அதோடு உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்புக்காக உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்தார் ஆம்ஸ்ட்ராங்.
வீட்டிற்கு வெளியே எங்கு சென்றாலும் துப்பாக்கியுடன் தான் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டு வாசலில் நிற்கும்போது அவரிடம் துப்பாக்கி இருக்காது என்ற கணக்கிலும் ஒருவேளை அவர் துப்பாக்கியை பயன்படுத்தினால் அப்போது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கலாம் என கொலையாளிகள் கையில் நாட்டு வெடிகுண்டுடன் சென்றதும் அம்பலமாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் முதலில் அவர் கைகளை இயக்காத படி அவரை தாக்க கொலையாளிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசைதிருப்பி பின்புறமாக இருந்து கொலையாளிகள் இடது பக்கமாக கழுத்தில் வெட்டியுள்ளனர். கணுக்காலில் வெட்டி அவர் நிற்க முடியாமல் நிலைகுலையச் செய்த பின்னர் தான் கொலையாளிகள் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி உள்ளர்.
கொலையாளிகள் வெட்டியதில் ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக தகவல் வெளியாகியுள்ளது. வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் கொலையாளிக்ள் தயார் நிலையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்துள்ளனர். சம்பவ இடத்தில் அந்த நாட்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications