உங்க வீட்டில் புதுசா ஏசி, டிவி வாங்கி இருக்கீங்களா? மின்சார கட்டண அபராதத்தை தவிர்க்க உடனே இதை படிங்க
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டாளர்கள் அதிக லோட் மின்சாரங்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தை தொட்டு உள்ளது. கிட்டத்தட்ட தினசரி வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவை எட்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

கடும் வெயில் காரணமாக மக்கள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக எப்போதும் வெயில் காலத்தில் மின்சார தேவை அதிகரிப்பது போலவே தற்போது மின்சார தேவை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
வெயில் காலம் காரணமாக மக்கள் பலரும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. அதேபோல் மக்கள் பலரும் வீடுகளில் நாள் முழுக்க ஃபேன் பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்துவிட்டது.
மின்சார பயன்பாடு: முக்கியமாக பலர் புதிதாக ஏசி வாங்குகிறார்கள். அதோடு நாள் முழுக்க ஏசியை ஓட விடுவதும் அதிகரித்துவிட்டது. இதனால் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள் அல்லது அதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் இவ்வளவு தேவை அதிகரித்தாலும் அதனால் மின் தடை ஏற்படவில்லை. மின்தடை இல்லாமல் இந்த தேவையை தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்து வருகிறது.

கோரிக்கை: முன்னதாக கோடைக்காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். தமிழ்நாட்டில் ஏசி, ஏர் கூலர், ஃபேன் ஆகியவற்றின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து உள்ளது.
இதனால் மின்சார பயன்பாடு அதிகரித்து உள்ளது. இப்படியே சென்றால் மே மாதங்களில் இன்னும் தேவை அதிகரிக்கும். இதை கட்டுப்படுத்த இப்போதே மின்சாரத்தை முடிந்த அளவு குறைவாக பயன்படுத்த வேண்டும்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டாளர்கள் அதிக லோட் மின்சாரங்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.
லோட் என்றால் என்ன?: லோட் என்பது ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும் மின்சாரம் பயன்படுத்தும் லோட் அளவு ஆகும். அதாவது உங்கள் வீடுகளில் எத்தனை அறைகள் உள்ளன. எத்தனை பிளக் பாயிண்டுகள் உள்ளன, எத்தனை மின்சார சாதனங்கள் உள்ளன என்று கணக்கிட்டு அதற்கு ஏற்ப லோட் கணக்கீடு செய்யப்படும்.
நீங்கள் மின்சார கணக்கு பெறப்படும் போது அதில் அப்ளிகேஷனில் லோட் எவ்வளவு என்று கொடுக்க வேண்டும்.

எப்படி சோதனை செய்வது?: உங்கள் வீட்டில் எவ்வளவு லோட் இருக்கிறது என்பதை நீங்கள் எளிதாக உங்கள் ஆன்லைன் மின்சார கணக்கில் இருந்து கண்டுபிடிக்க முடியும். அல்லது உங்கள் மின்சார அட்டையிலேயே அது எழுதி இருக்கும்.
உதாரணம்?: இந்த லோட் மின்சாரத்தை தவிர கூடுதலாக நீங்கள் மின்சாரம் பயன்படுத்தினால் உங்களுக்கு அதற்கான அபராதம் விதிக்கப்படும்.
உதாரணமாக உங்களுக்கு 4கே வால்ட் லோட் மின்சாரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதுவே நீங்கள் 6கே வால்ட் மின்சாரம் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரே நேரத்தில் கூடுதலாக எல்லா அறையிலும் புதிதாக வாங்கிய ஏசி, கூடுதல் டிவி, எல்லா அறையிலும் விளக்கு எரிந்தால் உங்களின் லோட் அதிகப்படுத்தும்.
இப்படி லோட் அதிகம் ஆனால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் ஒரே ஒரு முறை லோட் அதிகம் ஆனால் அபராதம் விதிக்கப்படாது. ஒரு வருடத்தில் 3 முறைக்கு மேல் லோட் அதிகம் ஆகும் பட்சத்தில் உங்கள் மின் கட்டணத்தில் 1 சதவிகிதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications