ஏடிஎம் கார்டே தேவையில்லை.. வெறும் மொபைல் போனை வைத்தே ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி தெரியுமா?
சென்னை: நீங்கள் உங்கள் கையில் ஏடிஎம் கார்டு இல்லாமலே எளிதாக மொபைல் போனை வைத்தே
ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.
இந்தியா முழுக்க யூபிஐ பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. உலகில் அதிக அளவில் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா காலத்தில் இருந்தே யுபிஐ பயன்பாடு உச்சத்தில் உள்ளது.
அனைத்து விதமான சேவைகளுக்கும் தற்போது யுபிஐ பயன்பாடு வந்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சாதாரண சாலையோர கடைகளுக்குகூட யுபிஐ வந்துவிட்டது. அதேபோல் பெரிய பெரிய அரசு நிறுவனங்கள் கூட யுபிஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன.
இன்னொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் தற்போது யுபிஐ சேவையை வழங்குகின்றன. மக்கள் யுபிஐ பயன்பாட்டை வெகுவாக விரும்ப தொடங்கிவிட்டனர். சமீபத்தில் கூட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டது.
வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2000-ம் ரூபாய்க்கு மேல் பிபிஐ முறையில் பணம் அனுப்பினால் இந்த கட்டணம் பொருந்தும். வணிக பரிவர்த்தனைக்கு ஒரு கடைக்காரர் ப்ரீபெய்டு முறையில்.. அதாவது வாலட் முறையில் பணம் செலுத்தினாலோ, ப்ரீபெய்டு கார்ட் முறையில் பணம் செலுத்தினாலோ அதற்கான 0.5 சதவிகிதம் முதல் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும்
ஏடிஎம்: யுபிஐ பயன்பாடு காரணமாக இந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு குறைந்துவிட்டது. மக்கள் ஏடிஎம்மிற்கு சென்று பணம் எடுப்பது குறைந்துவிட்டது. இதனால் பலரும் கைகளில் ஏடிஎம் கார்டுகளை கூட கொண்டு செல்வது இல்லை.
இப்படிபட்ட நிலையில்தான் யுபிஐ இல்லாத இடங்களில், அல்லது வேலை செய்யாத நேரங்களில் ஏடிஎம் சேவையை நாடுவது அவசியம் ஆகிறது. இது போன்ற நேரங்களில் உங்களிடம் ஏடிஎம் கார்டுகள் இல்லை என்றாலும் கூட ஏடிஎம் இல்லாமலே நீங்கள் உங்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியை போனில் வைத்திருக்க வேண்டும். கார்ட்டெல்ஸ் கேஷ் வசதியை ஏடிஎம்மில் கிளிக் செய்ய வேண்டும். அதில் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்று கேட்கும். அதை கொடுக்க வேண்டும்.
அதன்பின் ஏடிஎம் மெஷினில் தோன்றும் க்யூ ஆர் கோடை நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் கணக்கு வைத்து உள்ள உங்கள் வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியில் இருக்கும் 'QR cash withdrawal' ஆப்ஷனை திறந்து அதன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன்பின் ஏடிஎம் மெஷினில் தானாக பணம் வந்துவிடும். உங்கள் கையில் ஏடிஎம் கார்டு இல்லாத சமயங்களில் நீங்கள் இப்படி பணம் எடுக்கலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications