உணவு முதல் ஆக்சிஜன் வரை! உத்தரகாண்ட் சுரங்க ஊழியர்களை காத்த "தமிழ்நாடு".. சிலிர்க்க வைக்கும் சம்பவம்
சென்னை: உத்தரகாண்டில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சுரங்க ஊழியர்களுக்கு ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் கொடுக்க திருச்செங்கோட்டை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்தான் காரணம் ஆகும்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 17 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். இங்கே சுரங்கம் அமைக்கும் பணியின் போது சுரங்கம் இடிந்து உள்ளே மூடியதால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த சுரங்கப்பாதை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே உத்தர்காசி மற்றும் யமுனோத்ரியை இணைக்க உள்ள சாலையில் அமைந்துள்ளது. 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை செய்யும் போதே சுரங்கம் இடிந்துள்ளது.
இவர்களை வெளியேற்றும் பணி வெற்றிபெற்றுள்ளது. ஊழியர்கள் ஒவ்வொருவராக வெளியே வர உள்ளனர்.
தமிழ்நாட்டு நிறுவனங்கள் : உத்தரகாண்டில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் சுரங்க ஊழியர்களுக்கு ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் கொடுக்க திருச்செங்கோட்டை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்தான் காரணம் ஆகும். ரிக் தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் மூலம்தான் இங்கே துளையிடப்பட்டு உள்ளது. மேலே துளையிடப்பட்டு அது வழியாக முதலில் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.
அதன்பின் எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு.. அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டது. அதன்பின் அதே துளை வழியாக உணவும் அனுப்பப்பட்டது. இங்கே துளை போட காரணமாக இருந்தது 'தரணி ஜியோ டெக்' நிறுவனம் ஆகும். இவர் திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள். இந்த நிறுவனம்தான் 'பி.ஆர்.டி. - ஜிடி 5' என்ற கருவி மூலம் துளை போட்டு உள்ளே பொருட்களை அனுப்பி உள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படை கேட்டுக்கொண்டதன் பெயரில் இவர்கள் களமிறங்கி இங்கே துளை போட்டுள்ளனர். முதல் இரண்டு இடங்களில் போடப்பட்ட துளைகள் சரியாக பயன் அளிக்கவில்லை. இதனால் மூன்றாவது முறையாக இவர்கள் முயன்று அங்கே துளை போட்டுள்ளார்.
திருச்செங்கோடு நிறுவனங்கள்: இது போக 'பி.ஆர்.டி. - ஜிடி 5' கருவியை உருவாக்கியதும் இன்னொரு திருச்செங்கோடு நிறுவனம் ஆகும். பரந்தாமன் ராக் டிரில்லர் என்ற திருச்செங்கோடு நிறுவனம்தான் இந்த கருவியை உருவாக்கி உள்ளது. இதைத்தான் 'தரணி ஜியோ டெக்' நிறுவனம் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிறுவன ஊழியர்கள்தான் சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் செல்ல காரணம் ஆவர்.
மீட்பு பணிகள் தீவிரம்: சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த சுரங்கப்பாதை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே உத்தர்காசி மற்றும் யமுனோத்ரியை இணைக்க உள்ள சாலையில் அமைந்துள்ளது. 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை செய்யும் போதே சுரங்கம் இடிந்துள்ளது.
எலிவலை: எலி வலை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவர்களை மீட்கும் முடிவை கையில் எடுத்தனர். சுரங்கம் தூண்டுவதில் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டு தடைசெய்யப்பட்ட சுரங்க நடைமுறையான "எலி வலை டெக்னிக்" உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை காக்க களமிறக்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன் அளிக்காத நிலையில்.. ஊழியர்கள் கையால் சுரங்கம் தோண்டி.. குழாய் அமைத்து.. குழாய் வழியாக ஊழியர்களை வெளியே கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications