நாடே வியக்கும் "வந்தே பாரத்" ரயில்கள்... சென்னை தொழிற்சாலையில் எப்படி தயாரிக்கிறார்கள்! இதை பாருங்க
சென்னை: நாட்டில் வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கிய ரூட்களில் வந்தே பாரத் டிக்கெட்கள் உடனே விற்றுத் தீர்வது இதையே காட்டுகிறது. இந்த அட்டகாசமான வந்தே பாரத் பெட்டிகள் எப்படி, எங்கே தயாரிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.
உலகில் மிகப் பெரிய ரயில் நெட்வோர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், இந்திய ரயில்களில் வசதியும் வேகமும் இல்லை போதியளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்தது.
இந்த குற்றச்சாட்டிற்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் இந்திய ரயில்வே உருவாக்கியது தான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.. தானியங்கி கதவுகள், முற்றிலும் ஏசி, பயோ கழிப்பறைகள் என்று இந்த வந்தே பாரத் ரயில்கள் முழுக்க ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.

வந்தே பாரத்: இந்த வந்தே பாரத் ரயில் டெல்லி- கான்பூர்- அலகாபாத்- வாரணாசி வழித்தடத்தில் 2019, பிப்ரவரி 15இல் இயக்கப்பட்டது. அதன் பின்னர் பல வழித்தடங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுக்க விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை சென்னை- பெங்களூர்- மைசூரு, சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது மற்றொரு சிறப்பாகும். அதிலும் சென்னை பெரம்பலூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தான் இவை தயாரிக்கப்படுகிறது. அங்கே வந்தே பாரத் ரயில்களுக்கு எனத் தனிப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வந்தே பாரத் ரயிலை முழுமையாக என்ஜின் முதல் பெட்டிகள் வரை செய்து முடிக்க 2 மாதங்கள் வரை ஆகும்.
எப்படி: கார்களை போலவே, ரயில்களுக்கும் முதலில் Under frame எனப்படும் ரயிலின் கீழ் பக்கத்தை முதலில் தயார் செய்கிறார்கள். அதன் மேல் தான் ரயில் பெட்டியை அமைக்கிறார்கள். அப்போதே இன்னொரு பக்கம் sidewall எனப்படும் ரயிலின் பக்கவாட்டையும் ரெடி செய்கிறார்கள். 22 மீட்டர் நீளத்திற்கு இவை லேசார் கட் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. மேலும், இதற்காக அவர்கள் தானியங்கி ரோபோ கட்டரையும் பயன்படுத்துகிறார்கள்.

அதன் பிறகு அதில் கதவு, டாய்லெட் பகுதிகள் பிரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் தான் நாம் ரயில் பெட்டியைப் போன்ற ஒரு வடிவம் இதற்குக் கிடைக்கும். அதன் பிறகு அந்த பெட்டியை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அங்கே வைத்துத் தான், அதன் சீட், பெயின்டிங் ஆகியவை செய்யப்படுகிறது. ரயில் பெட்டிகள் முழுமை பெறுவதும் இங்கே தான். இவை உரியச் சோதனைக்குப் பின்னர் பயன்பாட்டிற்கு வரும்.
இந்த வந்தே பாரத்தில் பல அதிநவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன. உதாரணத்திற்குத் தானியங்கி கதவுகளைச் சொல்லலாம். அதன் கன்டிரோல் ஒட்டுமொத்தமாக டிரைவரிடம் மட்டுமே இருக்கும். எங்கே பிளாட்பார்ம் இருக்கிறதோ அங்கே மட்டும் கதவுகள் திறக்கப்படும், கதவுகள் மூடப்பட்ட பின்னரே ரயிலை இயக்க முடியும். இப்படிப் பல வசதிகள் உள்ளன. வந்தே பாரத் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக இதில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications