கருணாநிதியையே வீழ்த்தி.. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரான கதை! இந்தியாவே திரும்பி பார்த்த தேர்தல்
சென்னை: கருணாநிதியையே வீழ்த்தி 2011 தேர்தலில் வென்று கட்சி ஆரம்பித்த ஆறே ஆண்டுகளில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தது எப்படி? விரிவாக பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை கொடிகட்டிப் பறந்த காலத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக கோலோச்சியவர் விஜயகாந்த். 20ங்களின் தொடக்கம் வரை தொடர்ந்து ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வந்தவர் விஜயகாந்த். சினிமாவில் அநியாயங்களை கண்டு பொங்கும் கதாநாயகனாக நடித்து மக்களை கவர்ந்தவர். அரசியல், போலீஸ், ஊழல் என சமூக கருத்துக்களை கொண்ட கதாபாத்திரங்களில் அதிகளவில் நடித்து வந்தார்.

இதன் காரணமாகவே அரசியல் கட்சித் தலைவருக்கு இணையான ரசிகர்கள் ஆதரவு விஜயகாந்துக்கு கிடைத்தது. குறிப்பாக ரமணா படத்தின் பெரு வெற்றியை தொடர்ந்து விஜயகாந்தின் அரசியல் வருகை மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தானும் திராவிட சிந்தனை கொண்டவன் என்பதை காட்டினர்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தன்னுடைய கட்சி இருக்கும் என்று பகிரங்கமாக அறிவித்த அவர் தொடக்கம் முதலே அதிரடி காட்டத் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டார். அதில் அதிமுக வசம் இருந்த ஆட்சியை திமுக கைப்பற்றினாலும், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் விஜயகாந்த்.
அதற்கு அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டு ஒதுங்கிய விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக அதிரடியாக செயல்பட்டார். அவரது தலைமையில் தேமுதிகவும், திமுக, அதிமுகவுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து வாக்கு வங்கியையும் உயர்த்தியது. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை தேமுதிகவுக்கு பெற்றுக் கொடுத்தார் விஜயகாந்த். அந்த ஆட்சிக் காலத்தில் திமுகவுடனும், கருணாநிதியுடனும் ஏற்பட்ட மனக்கசப்பால் எப்படியாவது 2011 தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என கங்கனம் கட்டினார்.
திமுக - அதிமுகவுக்கு மாற்று தேமுதிக என்ற தன்னுடைய வாக்குறுதியை ஓரம் வைத்துவிட்டு அதிமுகவுடன் கரம் கோர்த்தார் விஜயகாந்த். அப்போது சினிமாவில் விஜயகாந்தின் எதிரியாக இருந்த வடிவேலுவை அழைத்து தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்தை விமர்சிக்க வைத்தது திமுக. ஆனால், அது திமுகவுக்கே எதிராக திரும்பியது. வடிவேலுவின் பேச்சுக்கள் விஜயகாந்த் மீதான அனுதாபத்தை அதிகரித்தன.
அதிமுக மற்றும் தேமுதிகவின் வாக்கு வங்கிகள் இணைந்து திமுக ஆட்சியை கவிழ்த்தது. அந்த தேர்தலில் வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றிபெற்றது. அதிமுக 150 இடங்களில் வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றது. திமுகவை விட 6 தொகுதிகள் அதிகமாக 29 இடங்களில் தேமுதிக வெற்றிபெற்றதால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார்.
இந்த தோல்விக்கு பின்னர் கருணாநிதியால் மீண்டும் முதலமைச்சரே ஆகமுடியவில்லை. இந்தியாவிலேயே முதுபெரும் அரசியல் தலைவராகவும், அரசியல் சாணக்கியராகவும் பார்க்கப்பட்ட கருணாநிதியை வீழ்த்தி கட்சி ஆரம்பித்த 6 வது ஆண்டிலேயே எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பதவியேற்றது தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் தேமுதிகவை திரும்பி பார்க்க வைத்தது. அந்த அளவுக்கு விஜயகாந்த் மாஸ் தலைவராக உயர்ந்தார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications