சூரியனின் "கொரோனாவில்" மூக்கை நுழைக்கும் இஸ்ரோ.. என்னது கொரோனாவா? அசத்தும் ஆதித்யா எல் 1 மிஷன்!
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ள நிலையில் சூரியனின் கொரோனா பாகம் குறித்த விவாதம் எழுந்துள்ளது.
விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுன்டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்குகிறது. 100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது. சூரியனை ஆய்வு செய்ய, செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது.

ஆகஸ்ட் 30 , சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஆதித்யா-எல் 1 மிஷன், ஒத்திகை மற்றும் உள் சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ கூறியது. சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.
கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும்.
கிட்டத்தட்ட 4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும். நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது.
நாசா பார்க்கர்: கடந்த 2021 ல் சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் என்று கருதப்படும் அதன் வெளிப்புற சுற்றுவட்டப்பகுதிக்குள் நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் நுழைந்தது. மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நாசா மூலம் கடந்த 2018ல் விண்ணில் ஏவப்பட்டது பார்க்கர் சோலார் ப்ரோப் (The Parker Solar Probe). இந்த The Parker Solar Probe சூரியனை குறித்து ஆராய்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனின் தன்மை எப்படி இருக்கிறது, அதன் வெளிப்புறம் எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக இது விண்ணில் ஏவப்பட்டது.
இந்த நிலையில்தான் சூரியனின் வெளிப்புற வளிமண்டல பகுதியை நாசாவின் The Parker Solar Probe தொட்டுள்ளது. அதாவது சூரியனில் இருந்து 3.8 மில்லியன் மைல் தொலைவிற்கு அருகில் The Parker Solar Probe சென்றுள்ளது. சூரியன் தொடக்கத்தில் உருவான இடமாக கருதப்படும் பகுதிக்குள் இந்த The Parker Solar Probe சென்றுள்ளது. இந்த The Parker Solar Probeல் 4.5 இன்ச் தடிமானம் கொண்ட கார்பன் காம்போசைட் ஷீல்ட் ஒன்று உள்ளது. இதுதான் சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை தடுத்து The Parker Solar Probeஐ காப்பாற்றுகிறது. சூரியனின் வெப்பத்தில் ஐஸ் கிரீம் போல The Parker Solar Probe உருகாமல் தடுப்பது இந்த ஷீல்ட்தான்.
இந்த ஷீல்டின் வெளிப்புறம் மட்டும் 1377 டிகிரி செல்ஸியஸ் வரை செல்ல கூடியது. சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்பகுதியை கொரோனா என்று அழைப்பார்கள். அதாவது நமது வளிமண்டலம் எப்படி உயரத்தின் அடிப்படையில் ஸ்ட்ரேடோஸ்பியர், ட்ரோபோஸ்பியர், என்று பிரிக்கப்பட்டு இருக்கிறதோ அதேபோல் சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் கொரோனா என்று அழைக்கப்படுகிறது.

இந்த கொரோனாவிற்குள்தான் நாசாவின் The Parker Solar Probe புகுந்துள்ளது. இந்த கொரோனா பகுதி சூரியனின் அருகாமை வளிமண்டலத்தை விட அதிக வெப்பநிலையுடன் இருக்கும். இங்கே இருக்கும் புழுதி, வேகம் காரணமாக சூரியனின் அருகாமை பகுதியை விட இந்த பகுதி அதிக வெப்பநிலையாக இருக்கும். இதைத்தான் இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது.
சூரிய மேல் வளிமண்டல (குரோமோஸ்பியர் மற்றும் கரோனா) இயக்கவியல் பற்றிய ஆய்வு. குரோமோஸ்பிரிக் மற்றும் கரோனல் வெப்பமாக்கல் பற்றிய ஆய்வு, அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் இயற்பியல், கரோனல் எரிப்பு பற்றிய ஆய்வு உள்ளிட்ட ஆய்வுகளை ஆதித்யா எல் 1 மேற்கொள்ள உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications