Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரவெடி பிளான்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்படி இயங்க போகுது தெரியுமா? அரசின் மாபெரும் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வண்டலூர் அருகே திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்படி இயங்கும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

சென்னை புறநகரில் வண்டலூர் அருகே அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட இந்த பேருந்து நிலையம் கொரோனா காலத்தில் கட்டப்படாமல் தடைபட்டது.

அதன்பின் திமுக ஆட்சியில் இதன் கட்டுமானம் மிக வேகமாக தொடங்கியது. திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விமான நிலையம் முறையான திட்டமிடல் இன்றி அதிமுக அரசால் தொடங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக அருகாமை பகுதிகளுக்கு சரியான பேருந்து வசதி, இணைப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

How will the Kilamakkam Bus Stand start operating? What is the Tamil Nadu Government plan?

அதோடு நிற்காமல் உள்ளே கட்டுமான பிளானும் மிகவும் தவறாக செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக நுழைவு வாயிலில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு மோசமாக திட்டம் வகுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இதன் திறப்பு விழா தள்ளிப்போனது.

இதோடு கடந்த 4 முறை இதன் திறப்பு விழா தள்ளிப்போய்விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது. முக்கியமாக மழை நீர் தேங்குவதை தவிர்க்க இங்கு தொடர் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வந்தன. அடுத்த மாதத்திற்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை. சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை என்று புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

எப்படி இயங்கும்?: இந்த நிலையில்தான் வண்டலூர் அருகே திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்படி இயங்கும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சென்னையில் இருந்து எந்தெந்த மாவட்டங்களுக்கு மக்கள் அதிகம் பயணம் செய்கிறார்கள் என்ற லிஸ்ட் எடுக்கப்பட உள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிக பேருந்து செல்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகமாக எந்தெந்தெ ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள் என்று லிஸ்ட் எடுக்கப்பட உள்ளது. அதன் அடிப்படியில் முதல் கட்டமாக ஒரு சில மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒரே கட்டமாக பேருந்துகள் இயக்கப்பட்டால் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

இதனால் பேருந்துகள் இயக்குவதை படிப்படியாக மேற்கொள்ள உள்ளன. முதல் கட்டமாக பெரும்பாலும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

அதற்கு அடுத்தபடியே மேற்கு மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரே கட்டமாக பேருந்துகள் இயக்கப்பட்டால் பேருந்துகளை இயக்குவதில் பெரிய சிக்கல்கள், குழப்பங்கள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+