தீபாவளி பண்டிகை! கிளாம்பாக்கம் செல்வது ரிஸ்கே இல்லை! ரஸ்க் சாப்பிடுறது போல் ரொம்ப ஈஸி!
சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தடைவதை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எளிமைப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தீபங்களின் திருநாளான தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் வரும் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இன்று மாலை முதலே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

இதற்காக நேற்று முதல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 20,378 பேருந்துகள் வரும் 19 ஆம் தேதி வரை இயக்கப்படும்.
சென்னையில் இருந்து மட்டும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து முனையங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதனால் மக்கள் எந்த சிரமமும் இல்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பேருந்தில் பயணம் செய்யலாம்.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும். வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் இன்று முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநகர் போக்குவரத்துக்கழகம் கூறியுள்ளது.
கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு ஏற்கெனவே மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள 3 பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications