பள்ளி மாணவர்களுக்கு வந்த குட்நியூஸ்.. இந்த "ஆவணங்கள்" எல்லாம் ரெடியா? தமிழக அரசின் உத்தரவு வந்தாச்சு
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான அடுத்த அதிரடியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.. இதுகுறித்த ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றும் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், இலவச பேருந்து வசதியும் அமைத்து தந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, இந்த இலவச பஸ் வசதி அமைத்து தரப்பட்டுள்ளது.. அதேபோல, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்களையும் வழங்கி வருகிறது.
இந்த இலவச பஸ் பாஸ் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.. அந்தவகையில், இந்த வருடமும் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி மும்முரமாகி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..

பஸ் பாஸ்கள்: இதைத்தவிர கடந்த வருடம் போலல்லாமல், இந்த வருடம் மாணவர்களின் பஸ் பாஸ், கம்ப்யூட்டரைஸ்டு அதாவது கணினி முறையில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், மாணவர்களின் விவரங்கள் + பஸ் பாஸ் விவரங்கள் அனைத்தும் கணினி மூலமாகவே பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
விறுவிறுப்பாக மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, மாணவர்களின் விவரங்களை உடனடியாக சேகரிக்குமாறு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் உத்தரவு ஒன்று வந்திருந்தது..
கணிணி மயம்: அதில், மாணவர்களின் விவரங்களை TNSED செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிகள்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் பஸ் பாஸ் தயாரிக்கப்பட்டு வருவதால், மாணவர்களின் பெயர், பள்ளி, புகைப்படம், எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு செல்கிறார் என்ற விவரம் ஆகியவை அதில் கணிணி முறையில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால், இந்த விவரங்கள் கேட்கப்படுகிறது.. இவைகளை மாணவர்களிடமிருந்து பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிவுரை: கோடை வெயில் காரணமாக தாமதமாக அதாவது, ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பஸ் பாஸ் வழங்கப்படாவிட்டாலும் பள்ளி சீருடை அணிந்திருந்தாலே மாணவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த ஆண்டு அந்த முறையை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் பழைய முறைப்படி நேரடியாக வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெ.ஜெயக்குமார் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
"பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகள் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயண அட்டை இணைய வழியே வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
மாணவர் நலன்: இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி, நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் நேரடியாக அட்டையைப் பெறும் பழைய நடைமுறையை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி இலவசப் பேருந்து பயண அட்டை பெற மாணவ, மாணவிகளின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களைப் பெற பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட மண்டல போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் உடனே சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை கூகுள் ஷீட்டில் பூர்த்தி செய்து தொகுப்பு அறிக்கையை அனுப்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பழைய நடைமுறை: ஆக மொத்தம், பழைய முறைப்படியே விரைவில் பஸ் பாஸ் விரைவில் வழங்கப்பட உள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications