ஞாபகம் இருக்கா வீரப்பன் மகளை.. மீண்டும் லைம்லைட்டில்.. ஹீரோயின் பேச பேச.. பூரித்து போன முத்துலட்சுமி
சென்னை: சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது வேதனையை தருவதாக, சந்தன கடத்தல் வீரப்பனின் 2வது மகள் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.. வீரப்பனின் முதல் மகள் ஏற்கனவே பாஜகவில் உள்ள நிலையில், தற்போது இரண்டாவது மகள் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக அதிரடி படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில், வித்யாராணி 3 வருடங்களுக்கு முன்பு, அரசியலுக்குள் என்ட்ரி தந்திருந்தார்.. அதிலும் பாஜகவுக்குள் நுழைந்திருந்தது, அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஜீவஜோதி
டிக்டாக் பிரபலங்கள் மற்றும் அரசியல் பின்புலம் இல்லாத, அரசியல் அனுபவமும் அல்லாத, அதே சமயம் மக்களிடம் பிரபலமாக உள்ளவர்களை தங்கள் கட்சியில் இணைக்க தேர்ந்தெடுத்து தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தமிழக பாஜக அந்த சமயத்தில் மேற்கொண்டிருந்தது.. அப்போதுதான், ஜீவஜோதி கட்சியில் இணைந்திருந்த நிலையில், சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணியும் இணைந்திருந்தார்.. கிருஷ்ணகிரியில் பாஜக மூத்த தலைவர் முரளிதரராவ் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார்.. கட்சியில் சேர்ந்ததுமே, பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் வித்யாராணி நியமிக்கப்பட்டார்.

வித்யா ராணி
வித்யா ராணி ஒரு வக்கீல் ஆவார். கட்சியில் இணைந்தது பற்றி வித்யாராணி அப்போது சொல்லும்போது, "மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் எண்ணம்.. தப்பான வழியை தேர்வு செய்திருந்தாலும் சேவை செய்வதுதான் அவரது எண்ணமாக இருந்தது.. அதேபோல, மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதால்தான் நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.. வித்யாராணி பற்றின இந்த செய்திகள் வெளியானபோதே, வீரப்பனின் இளைய மகள் விஜயலட்சுமி குறித்தும் சில தகவல்கள் வெளியாகின.. அவர் எம்ஏ இங்கிலீஷ் படித்துள்ளதாகவும், விசிகவில் உள்ளதாகவும் கூறப்பட்டது.. ஆனால், அதுகுறித்த உண்மைத்தன்மை உறுதியாக தெரியவில்லை.

லைம்லைட்டுகள்
இந்த நிலையில், இளைய மகளான விஜயலட்சுமி, மீண்டும் லைம்லைட்டிற்குள் வந்துள்ளார்.. சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்... மாவீரன் பிள்ளை என்ற படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து வரும்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி கலந்து கொண்டார், விழாவில் பேசிய வீரப்பனின் மகள் விஜயலட்சுமி தான் நடிக்க வந்ததற்கான காரணம் குறித்து விளக்கம் தந்திருந்தார்.. விழாவில் பேசிய அவர், "சிறுவயதில் முதலே எனக்கு நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.. 8ம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், படிப்பு காரணமாக என் அம்மா அதை அப்போது அனுமதிக்கவில்லை..

களங்கம்
சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. பாலியல் தொல்லைகள் அதிகரித்துவிட்டன.. குடியால் தீங்கும் அதிகரித்துவிட்டது. இதுகுறித்தெல்லாம் வாயில் பேசுவதைவிட, இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும்... அந்த விழிப்புணர்வு கருத்துக்களும் மனதில் பதியும்.. அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.. என்னுடைய அப்பா தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர்.. நிச்சயமாக என் அப்பாவின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்" என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்..

முதல்வர் மகன்
தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, "ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் யார் எனப் பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள். படம் என்ன கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள். நம்ம ஊரில் முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம். வீரப்பன் மகளும் நடிக்கலாம். சினிமா யார் என்றாலும் ஏற்றுக்கொள்ளும்" என்று பேசியிருந்தது விழாவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.. காரணம், பேரரசு, பாஜக நிர்வாகி ஆவார். சமீபத்தில் காயத்ரி ரகுராம் தமிழக பாஜக கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்த நிலையில், கட்சியின் பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்தார்... இப்போது அப்பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் பதவியை வகிப்பது பேரரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications