Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரேட் சேஞ்ச்.. "அவங்க" 2 பேரும் சேர போறாங்களாமே.. அரங்கமே அதிர்ந்த அந்த "குரல்".. எடப்பாடி மெகா மூவ்

இன்றைய தினம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மா.செக்களுடன் ஆலோசனை நடத்துகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, எதற்காக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி உள்ளார் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன.. அத்துடன், சிவி சண்முகம் இந்த கூட்டத்தில் பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பும் எகிறிவந்த நிலையில், கூட்டத்தில் முதல்வரிசையில் உட்கார்ந்துள்ளது பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே பாஜக எதிர்ப்பு மனநிலை என்பது, எடப்பாடி தரப்பில் பெருகி வருகிறது.. குறிப்பாக குஜராத் பதவியேற்பு விழாவை புறக்கணித்த பிறகு, சிவி சண்முகம் போன்றோர் வெளிப்படையாகவே பாஜகவை விமர்சிக்க துவங்கி உள்ளனர்.

"எங்களுடைய எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக ஏற்று கொள்ளுங்கள், அப்போதுதான் நாங்கள் உங்கள் கூட்டணிக்கு வருவோம்" என்பதையே இவர்கள் பாஜகவுக்கு உணர்த்த பார்க்கிறார்கள் என்றும், பாஜக உண்மையிலேயே எடப்பாடி தரப்பில் எதிர்க்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.

 சிவி சண்முகம்

சிவி சண்முகம்

ஜெயக்குமார், முனுசாமி, சிவி சண்முகம், என பலரும் பாஜகவுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில், வேலுமணி, தங்கமணி போன்ற சீனியர்கள், பாஜகவுக்கான ஆதரவு அலையை வீசிவருவதையும் ரத்தத்தின் ரத்தங்கள் கவனிக்கவே செய்கிறார்கள்.. எனவே, பாஜகவுடன் எடப்பாடி டீம் கூட்டணி வைக்குமா? அல்லது கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்குமா? ஒருவேளை வேலுமணி, தங்கமணி போன்றோர் பாஜக பக்கம் தாவினால், அதை எப்படி எடப்பாடி பழனிசாமி கையாளுவார் போன்ற சந்தேகங்களை சோஷியல் மீடியாவில் பலர் கிளப்பி விட்டு வருகின்றனர். அதேபோல, சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வராமல் பாதகமாக வந்தால் என்ன செய்வது? என்ற கிலி எடப்பாடி தரப்புக்கு கிளம்பி உள்ளதாக தெரிகிறது..

 அவசர அவசரமாய்

அவசர அவசரமாய்

இப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டத்தை இன்று தலைமை கழகத்தில் நடத்தி வருகிறார். கோர்ட்டு தீர்ப்பு வருவதை பொறுத்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து வருகிறார்கள்.. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விவாதித்து வருவதாக தெரிகிறது. அதேபோல, தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜனவரி 9ம் தேதி கூடும் நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காதது குறித்தும், இது தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறார்களாம்.

 மெரினா பீச்சில்

மெரினா பீச்சில்

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த கூட்டத்துக்கு மிக முக்கிய காரணம் ஒன்று சொல்லப்பட்டு வருகிறது.. அதிமுகவின் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பலமுறை குற்றம்சாட்டியிருந்தார்... பிறகு, சில நாட்களுக்கு முன்பும் பாஜக மீது மீண்டும் கடுமையான குற்றச்சாட்டுக்களை வீசியிருந்தார்.. சண்முகத்தை இப்படியெல்லாம் பேசுவதற்கு தூண்டி விடுவதே எடப்பாடி பழனிசாமிதான் என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.. இதற்கு ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்தாலும்கூட, அந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியேதான் அழுத்தமாக படர்ந்துள்ளன.

 சிங்கிள் தலை

சிங்கிள் தலை

காரணம் இந்த நிமிடம் வரை விசி சண்முகத்தை அழைத்து எடப்பாடி பழனிச்சாமி சத்தம்போடவில்லை.. கண்டிக்கவும் இல்லை.. மறுப்பு சொல்லவும் இல்லை.. இதுவும் விவாத பொருளாக மாறி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், எம்ஜிஆர் நினைவு நாள் பேரணியில் எடப்பாடியுடன் சிவி சண்முகம் கலந்து கொள்ளவில்லை... அந்த கூட்டத்தை புறக்கணித்தார். தனியாகவே பீச்சுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்... ஒருவேளை எடப்பாடி டீமுடன் சிவி சண்முகத்துக்கு உரசல்கள் துவங்கி உள்ளதா? ஏன் தனியாக மெரினாவுக்கு வந்து போனார்? என்ற கேள்விகள் சலசலக்க துவங்கின..

கிளைமேக்ஸ்

கிளைமேக்ஸ்

அந்தவகையில், இன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் சிவி சண்முகம் பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், சண்முகம் பங்கேற்றார்.. முன்வரிசையில் ஜெயக்குமார் பக்கத்தில் தெம்புடன் உட்கார்ந்து, கூட்டத்தில் பங்கேற்றும் வருகிறார்.. "பாஜக எதிர்ப்பு" என்ற விஷயத்தை எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் மேற்கோள்காட்டி பேசுவாரா? என்கிற ஆர்வமும் ஏற்பட்டு வருகிறது.. மற்றொருபுறம், அதிமுகவை ஒருங்கிணைக்கப்போவதாக சசிகலா சொல்லி வருகிறார்... அவருக்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு சில மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சசிகலா, ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில் தொடருவது குறித்து விவாதிக்க மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் கூட்டி உள்ளதாக சொல்லப்பட்டது.

அன்வர்ராஜா

அன்வர்ராஜா

அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் அல்லாத கூட்டணிக்கு பாஜக முன்வந்தால் அதை ஏற்க தயார் அல்லது பாஜக இல்லாமலேயே தேர்தலை சந்திக்கவும் தயார் என்பதே தற்சமயம் எடப்பாடி தரப்பின் முடிவாக உள்ளது.. இதன்மூலம் பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியும், இதன்மூலம் திமுகவுக்கு செல்லும் பாஜக அதிருப்தி ஓட்டுக்களை தன்பக்கம் திருப்ப முடியும் என்பதே மாஸ்டர் பிளானாக உள்ளது.. அதிருப்தியில் உள்ள அன்வர்ராஜா, கேசி பழனிசாமி, போன்ற சீனியர்களையும் அழைத்து கொண்டு, கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும் எடப்பாடி இறங்க போவதாக தெரிகிறது.

 ஒரே வாய்ஸ்

ஒரே வாய்ஸ்

பிரிந்த 2 தலைவர்களும் பேரும் இணைவது கட்சிக்கு பலமாக இருக்கும் என்பதுடன், அதற்கான அச்சாரமாகவும் இன்றைய கூட்டம் பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமலல, எந்த ஒரு சூழலிலும், ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினரை மறுபடியும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்ற ஒருமித்த குரலும் இன்றைய கூட்டத்தில் ஒலித்து வருகிறது.. ஆக மொத்தம், கிளைமேக்ஸ் நெருங்கி கொண்டேயிருக்கிறது போலும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+