பேசிட்டேயிருந்தாரு கருணாஸ்.. டக்னு "கூவத்தூர்".. கடுப்பான திமுக.. எடப்பாடி பழனிசாமிக்கு அதுக்கு மேல
சென்னை: திமுக கூட்டணிக்காக பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் நடிகர் கருணாஸ்.. அந்தவகையில், ராமநாதபுரத்தில் நடந்த பிரச்சார சம்பவத்தில் திடீர் சலசலப்பு ஒன்று நடந்துவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற வடிவேலு, "இதுகருணாநிதி சமாதி இல்லை, சன்னதி" என்று நெகிழ்ந்து கூறியிருந்தார்.

இதையடுத்து, திமுகவின் கூட்டங்களிலும் தென்பட துவங்கவும், ஒருவேளை, இந்த தேர்தலில் போட்டியிட போகிறாரா? திமுக வடிவேலுவை களமிறக்க போகிறதா? என்றெல்லாம் சந்தேகம் கிளம்பியது..
திமுக கவனம்: அந்தவகையில், வடிவேலுவை கடந்த 2011 போலவே, தேர்தல் பிரச்சாரத்துக்கு திமுக தரப்பில் அழைத்தார்களாம். ஆனால், வடிவேலு அதற்கு பிடிகொடுக்காமல் நழுவிவிட்டாராம்.. அதனால், நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் பக்கம் திமுகவின் கவனம் விழுந்ததாக தெரிகிறது..
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தன்னுடைய ஆதரவை கருணாஸ் வழங்கியிருந்த நிலையில், வடிவேலுக்கு பதிலாக கருணாசை பிரச்சாரத்தில் பயன்படுத்தவும் திமுக முடிவு செய்தது.. இந்த முடிவை கருணாஸும் ஒப்புக்கொண்டாராம்.
கருணாஸ்: இதற்கு பிறகுதான், திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் லிஸ்ட்டில் 33-வது இடத்தில் கருணாஸ் பெயர் இடம்பெற்றது.. தற்போது கருணாஸ் திமுகவுக்காக பிரச்சாரத்தையும் துவங்கிவிட்டார்.
ஆனால், பிரச்சாரத்துக்கு வந்ததுமே, சலசலப்பு ஒன்று கிளம்பிவிட்டது.. ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து நயினார் கோவில், கொடிக்குளம், கொட்டகுடி, அக்கிரமேசி ஆகிய கிராமப் பகுதிகளில் நடிகர் கருணாஸ் பிரச்சாரம் செய்தார்... அப்போது எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்து கேள்விகளை எழுப்பினார் கருணாஸ்.
நவாஸ்கனி: "127 எம்எல்ஏக்களும் வாக்களித்தது எடப்பாடி பழனிசாமிக்காக அல்ல. சசிகலாவுக்காகத்தான்... இதை எல்லாம் சொல்ல பழனிசாமி தயாரா ? கோடநாடு ஜெயலலிதாவின் இடம்தான். அதில் சசிகலாவுக்கும் பங்கு உண்டு. ஆனால், அங்கு நடந்த கொலைகளுக்கு யார் காரணம் என கண்டுபிடித்தார்களா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.
அப்போது, அங்கிருந்த இளைஞர்களில் ஒருவர் "கூவத்தூரில் நீங்களும்தானே பழனிசாமிக்கு ஓட்டு போட்டீர்கள்" என்றார்.. இதைக்கேட்டதுமே அங்கிருந்தவர்கள் ஒருகணம் திகைத்து போனார்கள்.. பிறகு, அந்த இளைஞர் சொன்னதற்கு, திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த இளைஞரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
கூவத்தூர்: எனினும், கூவத்தூர் விவகாரத்தை தற்போது கருணாஸ் கிளப்பியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. காரணம், அதிமுக கூட்டணியில் இருந்து அன்று வெளியேறிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், கூவத்தூர் குறித்த பரபரப்பை அவ்வப்போது கிளப்பிக் கொண்டேயிருந்தார்.
ஒருகட்டத்தில், கருணாஸை கைது செய்யும் அளவுக்கு முந்தைய எடப்பாடி அரசு சென்றது.. இதற்கு இன்னொரு காரணம், திமுக தலைவராக ஸ்டாலினுடன் கருணாஸ் அப்போது "டச்'சில் இருந்தது எடப்பாடியை சீண்டியதாக சொன்னார்கள்..
தயங்க மாட்டேன்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோதுகூட, செய்தியாளர்களிடம் கருணாஸ் பேட்டி தந்திருந்தார். அப்போது, "தமிழக அரசினை விரைவில் கலைத்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் புதிய அரசை உருவாக்க வேண்டும். தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன். காரணம், கூவத்தூர் சம்பவங்களுக்கு நான் ஒருவன் தான் ஆதாரம்" என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
இப்போது கூவத்தூர் சம்பவத்துடன், கொடநாடு விவகாரத்தையும் கிளறிவிட்டு, எடப்பாடி பழனிசாமி குறித்து கருணாஸ் எழுப்பியிருக்கும் கேள்விகள், தேர்தல் நேரத்தில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications