"டோட்டல் காலி" போல.. அவரும் இங்கேயே வர்றாரா.. "துண்டு" சேருதாமே.. அப்படின்னா எடப்பாடி என்ன செய்வார்?
ஓபிஎஸ் தரப்பில் சில முக்கிய புள்ளிகளை திமுக தரப்பு தங்கள் பக்கம் கொண்டுவர முயன்றுவருகிறதாம்
சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்த சறுக்கல்களை சந்தித்துவரும் நிலையில், ஓபிஎஸ் கூடாரம் அளவுக்கு அதிகமாகவே அதிர்ச்சியில் உள்ளதாம்.. இந்த அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும்விதமாக, இன்னொரு தகவல் வெளியாகி டென்ஷனை கூட்டி வருகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், அடுத்து ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது..
ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ் உள்ளிட்ட சீனியர்கள் மட்டுமே உள்ள நிலையில், மெல்ல மெல்ல ஓபிஎஸ்ஸின் கூடாரமும் கலைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

மவுசு எகிறுது
கடந்த வாரம்கூட, ஈரோடு மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கே சென்று அவர்பக்கம் இணைந்தும்விட்டனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், அடுத்தக்கட்ட ராஜதந்திரத்தை எடப்பாடி டீம் அவிழ்த்துவிட்டுள்ளதாம். இதுகுறித்து 4 நாட்களுக்கு முன்பும், ஒன் இந்தியா தமிழில் ஒரு எக்ஸ்க்ளூசிவ் செய்தியை நாம் பதிவிட்டிருந்தோம்.. அதாவது, ஓபிஎஸ் மீதான நம்பிக்கையை அவரது ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கி உள்ள நிலையில், இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு, எடப்பாடி தரப்பு ஓபிஎஸ் கூடாரம் உள்ளே நுழைந்துள்ளதாம்..

சூசைட் சமம்
ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தொடர்பு கொள்ளும் எடப்பாடி தரப்பு மா.செ.க்கள் தொடர்பு கொண்டு பேசிவருகிறார்களாம்.. அதாவது, "ஓபிஎஸ்சுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. அவர் பாஜகவில் சேர வேண்டும் அல்லது தனிக் கட்சி துவங்க வேண்டும். இந்த இரண்டில் எது நடந்தாலும் அது சூசைட்டுக்கு சமம்... அவருக்கே எதிர்காலம் இல்லாதபோது, உங்களுக்கும் இருக்காது. அதனால், மறுபடியும் நம்ம கட்சிக்குள் வந்து விடுங்கள். எடப்பாடியிடம் பேசி உங்களுக்கான முக்கியத்துவத்தை கிடைக்கச் செய்கிறோம். இப்போதே முடிவு எடுத்தால் அது உங்களுக்கு நல்லது. இனியும் ஓபிஎஸ்சை நம்பி ஏமாறாதீர்கள்" என்று பேசி வருகின்றனர்.

டோட்டல் காலி
எடப்பாடி உத்தரவின் பேரிலேயே இந்த முயற்சியை அவரது மா.செ.க்கள் எடுத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்த முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பதாக மா.செ.க்கள் சொல்கின்றனர்.. அதனால் விரைவில் எடப்பாடியை நோக்கி கிளம்பி வருவார்கள் என்றும், ஓபிஎஸ்சின் கூடாராம் காலியாகும் என்றும், அதீத மிதப்பில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இதில் வைத்திலிங்கம் பெயர் அவ்வளவாக அடிபடவில்லை.. ஏற்கனவே ஒருமுறை வைத்திலிங்கத்தை, தங்கள் பக்கம் கொண்டுவரும் முயற்சியை எடப்பாடி தரப்பு எடுத்ததாக செய்திகள் கசிந்தன.ஆனால், எந்தசூழலிலும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்து, கடைசிவரை அவருடனேயே உறுதுணையாக நின்று விசுவாசத்தை காட்டி வருகிறார் வைத்திலிங்கம்..

டாப் 5 தலை
இதற்கெல்லாம் காரணம், ஓபிஎஸ் மீதான விசுவாசம் என்பதைவிட, எடப்பாடி மீதான அதிருப்திதான் என்றும் சொல்லப்பட்டது.. காரணம், ஆரம்ப காலத்தில் இருந்து, சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர் வைத்திலிங்கம்.. சசிகலா சமூகத்தை சேர்ந்தவர்.. டெல்டாவை சேர்ந்தவர்.. சிறைக்குச் செல்லும் வரை, அவரின் குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்.. ஜெயலலிதா இருந்தபோதே, கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் முக்கிய தளபதியாக வலம்வந்தவர்.. ஜெ. அமைச்சரவையில் அன்றைய டாப் 5 முக்கிய தலைவர்களில் 3வது இடத்தில் இருந்தவர் தான் வைத்திலிங்கம்.. இன்னும் சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமியே, இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்திருக்கிறார்.

வைத்திலிங்கம்
எனினும், எடப்பாடி ஆட்சியில் தனக்கான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவருக்கு இருந்துவந்துள்ளது.. மேலும், கொங்கு மண்டலத்துக்கு மட்டுமே எடப்பாடி முக்கியத்துவம் தருவதுடன், வேலுமணி, தங்கமணி என நிர்வாகிகளுக்கும் அதிக முக்கியத்துவத்தை எடப்பாடி தந்துவந்ததால்தான், வைத்திலிங்கத்துக்கு அதிருப்தி ஏற்பட்டதாக தெரிகிறது.. ஆனால், சசிகலாவை நேரில் சந்தித்து அவருடன் இணைய போகிறார் என்றுகூட செய்திகள் வலம்வந்தன.. ஆனால், ஓபிஎஸ் போலவே இவரும் சசிகலா விஷயத்தில் அமைதி காத்தார்.. இப்போதும்கூட, சசிகலாவுக்கு மறைமுக ஆதரவை வைத்திலிங்கம் தருவதை அறிந்த எடப்பாடி தரப்பு, வைத்திலிங்கத்தை கட்சிக்குள் இணைத்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.

முணுமுணுப்பு
அதனால் திமுக இதை பயன்படுத்தி கொள்ள நினைப்பதாக சொல்கிறார்கள்.. முக்குலத்தோர் வாக்குகளை, டெல்டா பகுதிகளில் இன்னும் பலப்படுத்தவே இப்படி ஒரு முயற்சியை திமுக எடுக்க நினைக்கிறதாம்.. இதற்கான அசைன்மென்ட் அந்த முக்கிய அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.. ஏற்கனவே அதிமுகவில் இருந்த அந்த அமைச்சர் இருந்ததால், நட்பின் அடிப்படையில் வைத்திலிங்கம் உட்பட சிலரை திமுக பக்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. எடப்பாடி பக்கம் வைத்திலிங்கம் செல்வாரா? அல்லது சசிகலா பக்கம் செல்வாரா? என்றெல்லாம் கடந்த கடந்த ஒரு வருடகாலமாகவே முணுமுணுப்புகள் எழுந்துவரும்நிலையில், இப்போது திமுக பக்கமிருந்தும் எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!

தூண்டில் மீன்
இன்னொரு தகவலும் வட்டமடிக்கிறது.. பிரிந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் எடப்பாடி பழனிசாமி ஈடுபட உள்ளதாக செய்திகள் வருகின்றன.. அன்வர்ராஜா, போன்ற சீனியர்களையும் அழைத்து கொண்டு, கட்சியை பலப்படுத்தலாமா? என்ற யோசனையும் உள்ள நிலையில், நாம் தமிழர் & அமமுக பக்கம் பார்வையை வீசியுள்ளதாம்.. எவ்வளவு முட்டிமோதினாலும், தென்மண்டல சமூக மக்களின் ஆதரவை எடப்பாடி பெற முடியாத நிலையில், இப்படி ஒரு வியூகத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. சுருக்கமாக சொல்லப்போனால், கொங்குவை தவிர, பிற இடங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை பிரிக்கக்கூடிய, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரை வளைக்கும் முயற்சியில்தான் எடப்பாடி டீம் இறங்கி உள்ளதாம்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications