Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மெகா சிக்கல்!" மகளிர் உரிமை தொகை திட்டம்! ரெவின்யூ அதிகாரிகள் அதிரடி முடிவு! இனி ரொம்ப கஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமை தொகை ஏற்கனவே இரண்டு முறை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்திற்கு மிகப் பெரிய பிரச்சினை இப்போது ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தல் சமயத்தில் திமுக முன்வைத்த வாக்குறுதிகளில் முக்கியமானது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை. திமுக வென்று ஆட்சியை அமைத்தது முதலே இத்திட்டத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 Huge problem for Magalir Urimai thogai scheme as Revenue officials decide boycott scheme works

இந்தச் சூழலில் தான் இந்தாண்டு பட்ஜெட் சமயத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கு மகளிர் உரிமை தொகை திட்டம் என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலம் பெறப்பட்டது.

உரிமை தொகை: அதைத்தொடர்ந்து தகுதி வாய்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் சுமார் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு மாதங்களுக்கான உரிமை தொகை பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. மேலும் தங்களுக்குத் தகுதி இருந்தும் மகளிர் உரிமை கிடைக்கவில்லை என்று கருதும் பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியானது. அதாவது உரிமை தொகை குறித்து அவ்வப்போது மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், மாதாமாதம் ஆய்வு கூட்டங்களை நடத்தி அதில் தகுதி இல்லாதோருக்கு உரிமை தொகை செல்வது கண்டறியப்பட்டால் அவர்கள் பெயர்கள் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பிரச்சினை: இதற்கிடையே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA) வரும் அக். 26ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் காலவரையின்றி புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் தலைவர் எம்.பி. முருகையன் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து பிரபல ஆங்கில செய்தித்தாளுக்கு முருகையன் அளித்த பேட்டியில், "விரிவான ஆலோசனைக்கு பிறகே இந்த திட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்காகச் சிறப்பு அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டுள்ள ஏஐஎஸ் அதிகாரி இளம்பகவத்தின் செயல்பாடுகள் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். அவரது போக்கும் நடத்தையும் ஊழியர்களுக்கு விரோதமாக இருக்கிறது. இதுவே உரிமை தொகை பணிகளைப் புறக்கணிக்க முக்கியக் காரணமாகும்" என்றார்.

என்ன காரணம்: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்பது தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மெகா திட்டமாகும். இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேரடியாகக் கண்காணித்து வருகிறார். இத்திட்டத்தில் களத்தில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் அது குறித்துப் பேசப் போனால் சிறப்பு அதிகாரி அதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஊழியர்கள் சொல்லும் பிரச்சினையைக் கேட்காமல் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை மட்டும் அளிக்கிறார்.. அதுவே பிரச்சினைக்குப் பிரதான காரணம் என்கிறார் முருகையன்.

ஏற்கனவே தாலுகா அளவில் சில இடங்களில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. இது அரசுக்கும் நன்கு தெரியும்.. எனவே, இத்திட்டத்திற்குக் கூடுதல் அதிகாரிகள் நிச்சயம் தேவைப்படும். அப்படியிருக்கும் போது தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ஊழியர்கள் மகளிர் உரிமை திட்டப் பணிகளைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பிரச்சினையைச் சரி செய்ய அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

போராட்டம்: இதன் காரணமாகவே புறக்கணிக்கும் முடிவை ஊழியர்கள் எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அக்டோபர் 26ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு அனைத்து அதிகாரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் முருகையன் கூறினார். அதன் பிறகும் பிரச்சினை சரி செய்யவில்லை என்றால், நவம்பர் 21ஆம் தேதி ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்தும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஆள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உரிமை தொகை தொடர்பான அனைத்து பணிகளையும் புறக்கணித்தால்... அது உரிமை தொகை மேல்முறையீடு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கலை தரும் என்றே கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+