Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீஸ் பீஸா போகுதே.. திமுகவை விடுங்க.. அதென்ன டீம்? புதுசா முளைத்த "உள்குத்து".. கவனிக்கும் எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு 2 விதமான சிக்கல்கள் கிளம்பி உள்ளதாக தெரிகிறது.. ஒருசிக்கல் திமுக தரப்பில் இருந்தும், மற்றொரு சிக்கல் சொந்த கட்சிக்குள்ளிருந்தும் வெடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

90 சதவீதம், தன்னுடைய கைக்குள்ளேயே அதிமுக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி வந்தாலும், பொதுச்செயலாளர் என்ற பதவியை அவ்வளவு எளிதாக எட்டிவிட முடியவில்லை.

ஒருபக்கம், பாஜக பூசல் வெடித்து கிளம்ப, மறுபக்கம் திமுக அதிரடிகளை கிளப்ப, ஓபிஎஸ்ஸும் விஸ்வரூபம் எடுத்து வருவது எடப்பாடி தரப்பை லேசாக அதிர செய்தும் வருகிறதாம்.

 சீமான் கூடாரம்

சீமான் கூடாரம்

இப்போதைக்கு மாற்றுக்கட்சியில் உள்ளவர்களை அதிமுகவுக்கு கொண்டு வரும் அசைன்மென்ட்களை, முக்கிய நிர்வாகிகளுக்கு ஒதுக்கி உள்ளார்.. அதன்படி, மாற்று கட்சியினர் ஒவ்வொருவராக அதிமுகவில் இணைந்து கொண்டு வருகிறார்கள்.. அமமுகவுக்கு மட்டுமே ஷாக் தந்து கொண்டிருந்த எடப்பாடி, திடீரென நாம் தமிழர் கட்சியிலும் கையை வைத்துள்ளார்.. திமுகவுக்கு எதிரான அணியை கட்டமைப்பதில் தீவிரம் காட்டிவரும் எடப்பாடி பழனிசாமி, 2 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளாராம்.. கொங்குவை மெல்ல மெல்ல திமுக பக்கம் இழந்து வரும் நிலையில், கொங்கு ஆபரேஷன் ஆரம்பமாகி உள்ளதாம்.. அதில் முதல் பந்துதான் நாம் தமிழர் கூடாரத்தின் மீது வீசப்பட்டுள்ளது என்கிறார்கள்.

 கலக்கம் சீனியர்கள்

கலக்கம் சீனியர்கள்

அதிமுகவில் 75 மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக செயல்படுவதாக கூறப்படும்நிலையில், இவைகளை குறைத்து ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றும் முடிவிலும் இருக்கிறாராம் எடப்பாடி.. அப்படி மாற்றம் நிகழும் நிலையில், சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகளை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே தங்களை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி வைத்து வருகிறார் என்று சீனியர்கள் பொருமலில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படி ஒரு புது முடிவு அவர்களுக்கு மேலும் கலக்கத்தை தந்து வருகிறதாம்.. எனவே, சொந்த கட்சிக்குள்ளேயே அதிருப்திகள் இனி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

ஆளுமை

ஆளுமை

அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமிக்கு தற்போதுள்ள பலமே அவரது ஆதரவாளர்கள்தான்.. இந்த மெஜாரிட்டியை சுட்டிக்காட்டிதான், தன் ஆளுமையை நிரூபித்தும் வருகிறார்.. எனவே, இந்த பிளஸ் பாயிண்ட்டை உடைக்கவே திமுக திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.. எடப்பாடி தரப்பில் உள்ள அதிருப்தியாளர்களை தட்டி தூக்கி திமுக பக்கம் கொண்டுவந்து விடவேண்டும் என்று செந்தில் பாலாஜியிடம் அசைன்மென்ட்டும் தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இதற்கு நடுவில், கொங்கு சீனியர்கள், எடப்பாடி தரப்புடன் முன்புபோல் நெருங்கி உறவாடுவதில்லை என்றும், அவர்களில் பெரும்பாலானோர் பாஜக ஆதரவாளர்களாக உள்ளதும், எடப்பாடிக்கு பெருத்த தலைவலியைதான் தந்து வருகிறதாம்.

எதிர்ப்பாளர்கள்

எதிர்ப்பாளர்கள்

எடப்பாடி அணியிலேயே பாஜக ஆதரவாளர்கள், பாஜக எதிர்ப்பாளர்கள் என 2 டீம்கள் உள்ளன.. வேலுமணி, தங்கமணி போன்ற சீனியர்கள் பாஜகவுக்கு ஆதரவாகவும், சிவி சண்முகம், ஜெயக்குமார், முனுசாமி போன்றோர்கள், பாஜகவுக்கு எதிரான மனநிலைமையில் உள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. அதிமுக 4ஆக உடைந்து, அதில் எடப்பாடி அணி தரப்புக்குள்ளேயே ஒற்ற கருத்து இல்லை என்பதை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு சீக்ரெட் தகவல் கசிந்து வருகிறது.

வலதுகரம்

வலதுகரம்

ஒற்றைத் தலைமையின் கீழ் அதாவது தன்னுடைய அதிகாரத்தின்கீழ் கட்சியை எடப்பாடி கொண்டு வரும்பட்சத்தில், ஓவர் அதிகாரம் அவருக்கு இருந்துவிடக்கூடாது என்று, எடப்பாடி பழனிசாமியின் "வலதுகரமான" அந்த முன்னாள் அமைச்சர் நினைக்கிறாராம்.. அதனால், கட்சியின் மூத்த உறுப்பினர்களைக் கொண்ட அதிகாரம் மிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறாராம். அந்த குழுவினரை கலந்து அவர்களின் ஒப்புதலின் பேரில்தான் எந்த முடிவையும் பொதுச்செயலாளர் எடுக்க வேண்டும் என்பதாகவும் வலியுறுத்தி வருகிறாராம்..

 செம அப்செட்

செம அப்செட்

இப்படி ஒரு குழு அமைப்பதனால், தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்பட்டு, அனைவரின் ஒப்புதலுடன் அவைகள் நிறைவேற்றப்பட்டால், அதிமுகவில் எந்தவித பிளவும், தலைவர்களுக்குள் அதிருப்தியும் இருக்காது என்று நினைக்கிறாராம்.. பாஜக எதிர்ப்பாளரான அந்த மாஜி அமைச்சர் யோசித்துள்ள இந்த முடிவுக்கு 2ம் கட்ட தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.. இந்த யோசனை எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாக தெரிகிறது.. அப்படி ஒரு குழு வேண்டாம் என்று மறுத்தாலும், சிக்கலாகிவிடுமே என்று நினைக்கிறார்.. எனினும், இவ்வளவு பாடுபட்டும், எல்லாவற்றையும் சமாளித்து, கட்சியை ஒருவழியாக தன் கையில் கொண்டுவந்தும், புதுசாக முளைக்கும் இப்படி ஒரு விஷயத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறாராம் எடப்பாடி..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+