Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீட்டர் அல்போன்ஸ்ஸை விடுங்க.. வீரமணி எப்பவுமே இப்படித்தான்.. மேட்டருக்கு வந்த இந்து முன்னணி.. பொளேர்

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சுக்கு இந்து முன்னணி ஆதரவு தந்ததுடன் முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழர்கள் மலிவான அரசியலை புரிந்து கொண்டு விட்டனர்... வெற்று அரசியல் பேச்சுக்களை தமிழக இளைஞர்கள் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஆதரிக்க வேண்டும்" என்று இந்து முன்னணி கட்சி வலிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ரவி, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேசும் கருத்துகள், பலசமயங்களில் சர்ச்சையாகி போவது வழக்கமாக இருந்து வருகிறது.. குறிப்பாக, சனாதன தர்மம் குறித்து ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆளுநரின் பொறுப்பு என்ன? அவர் தன் கடமையை மறந்து, ஆர்எஸ்எஸ் பிரமுகர் போல செயல்படுவதாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்..

பூங்குன்றனார்

பூங்குன்றனார்

அந்தவகையில் சமீபத்தில் ராஜ்பவனில் நடந்த விழாவில் பேசியதும் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது.. அப்போது பேசிய ஆளுநர், சனாதன தர்மம் குறித்து மீண்டும் தன் பேச்சில் வலியுறுத்தியிருந்தார். "சனாதன தர்மம் என்பது விரிவானது. கனியன் பூங்குன்றனாரின் புறநானூறில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தர்மம் என்பதை நாம் மதம் என புரிந்து கொண்டுவிட்டோம். அப்படி புரிந்து கொண்டதால் மாபெரும் தவறு செய்துவிட்டோம். நமது இந்திய கொள்கைகள் மேற்கத்திய சிந்தனையை தொடர்ந்ததாக இருந்தது. டார்வினின் கோட்பாடும் , மார்க்ஸின் சித்தாந்தம், இறையியல், ரூசோ கோட்பாடு என்பவை எல்லாம் இந்தியாவின் தேசியத்துவ வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தின.

 டார்வின் கோட்பாடு

டார்வின் கோட்பாடு

இந்தியாவை கார்ல் மார்க்ஸின் சிந்தனை சிதைத்துப் போட்டது. ஆனால் அந்த சிந்தனை இப்போது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.. மார்க்ஸின் சித்தாந்தமானது இல்லாதவர்கள் மேலே உயர வேண்டும் என்கிறது. இது இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான மோதலை உருவாக்குகிறது. இது சமூகத்தில் பிளவுகளுக்கு காரணமாகவும் நிரந்தரமான மோதலையும் உருவாக்கக் கூடியது. ஜனநாயகத்துக்கு உதாரணமாக ஆபிரகாம் லிங்கனை காட்டுகிற போக்கு இருக்கிறது. டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பின்பற்றுகிறார்கள். இவை அனைத்துமே நமது மேற்கத்திய அடிமை நிலையின் வெளிப்பாடுதான். இந்திய பேராசிரியர்கள் ஐரோப்பிய தத்துவத்தை உயர்ந்ததாக தூக்கிப் பிடிப்பது வேதனைக்குரியது" என்று ஆளுநர் பேசியிருந்தார்.

 வீரமணி நறுக்

வீரமணி நறுக்

இந்த பேச்சுக்கு வழக்கம்போல், விசிக, திராவிட கழகத்தினர், கம்யூனிஸ்ட் கட்சிகள், எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், இந்து முன்னணி ஆளுநரின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக இந்து முன்னணியின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்: "ஜனசங்க தலைவராக இருந்த பண்டிட் தீனதயாளின் கருத்துரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில், கவர்னர் ரவி பேசிய கருத்தை, அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தி.க. தலைவர் வீரமணி மற்றும் தி.மு.க.,வினர் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

ராமராஜ்ஜியம்

ராமராஜ்ஜியம்

கவர்னர் தெரிவித்த கருத்தை விமர்சிப்பவர்களது எண்ணம் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தை, ஆதரிக்கும் வகையில் இருக்கிறது.. இந்தியா குடியரசு நாடாக அறிவித்த நாளில் இந்திய மக்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை என்பது நிறைவேற்றப்பட்டது. பாகுபாடு அற்ற இந்தப் புரட்சி, வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமெரிக்கா உட்பட பல நாட்டில் பெண்களுக்கும், கறுப்பினத்தினருக்கும் ஓட்டுரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது. மகாத்மா காந்தி, நம் நாட்டுக்கு ஏற்ற கொள்கை கம்யூனிசமோ, முதலாளித்துவ கொள்கையோ அல்ல, ராமராஜ்யமே என்று அறிவித்தார்.

 பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ்

நம்முடைய துரதிர்ஷ்டம், காங்கிரஸ் ஆட்சியாளர்கள், காந்தியின் கொள்கையை விடுத்து, கம்யூனிச சோஷலிச பாதையில் நாட்டை இழுத்து சென்றனர். இதற்கு மாற்றாகத்தான், பண்டிட் தீனதயாள் சுதேசி கொள்கையை முன்னிறுத்தினார். அதுவே சுயசார்பு கொள்கை. பீட்டர் அல்போன்ஸ், வீரமணி, முத்தரசன் போன்றோர் இன்னமும் தோற்றுப்போன சித்தாந்தத்தை ஆதரித்து கவர்னரை விமர்சித்து வருகின்றனர். தமிழர்கள் இவர்களின் மலிவான அரசியலை புரிந்து கொண்டு விட்டனர். இவர்களது வெற்று அரசியல் பேச்சுக்களை தமிழக இளைஞர்கள் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஆதரிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார் காடேஸ்வரா சுப்ரமணியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+