மனைவியுடன் சேர்ந்து வாங்கிய சொத்தில் கணவர் மட்டுமே தனி உரிமை கோர முடியாது.. டெல்லி ஹைகோர்ட் பளிச்
சென்னை: விவாகரத்து பெற்ற கணவருக்கு வேலை இல்லாவிட்டாலும், அவரது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியது அவரது கடமை என்று அலகாபாத் ஹைகோர்ட் சமீபத்தில் கூறியிருந்தது.. அதேபோல வசதியான மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியமில்லை என்று மற்றொரு வழக்கில் இதே அலகாபாத் ஹைகோர்ட் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.. இந்நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாங்கிய சொத்தில், கணவர் தனி உரிமை கோர முடியாது என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த அந்த டாக்டர் தம்பதிக்கு ஒரேயொரு மகன் இருக்கிறார்.. எனினும், தம்பதிரிடையே அளவுக்கு அதிகமான கருத்து வேறுபாடுகள் நிலவ வந்தன.. இதனால் இருவருக்குள்ளும் தகராறுகள் வெடித்தன.

குடும்ப நல நீதிமன்றம்
பிறகு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாரத்து வழக்கு தொடுத்தனர்..உடனே நீதிமன்றமும், மனைவிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு கணவருக்கு உத்தரவிட்டது.
உடனே இந்த உத்தரவை எதிர்த்து கணவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை ஹைகோர்ட்டுக்கு சென்றார்.. இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, "மனைவியின் அதிக வருமானம் "மனுதாரர், தன்னுடைய மனைவிக்கு, மாதம் 30,000 ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என, குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது..
வசதியான மனைவிக்கு ஜீவனாம்சம்
மனுதாரரின் மகன் 'நீட்' தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறார் அவரது படிப்புக்கான செலவாக, 2.77 லட்சம் ரூபாயை தர, மனுதாரர் சம்மதித்துள்ளார். அதே நேரம், அவரது மனைவிக்கு அதிகளவில் அசையா சொத்துக்களும், நல்ல வருமானமும் உள்ளது. மேலும், மனைவி ஸ்கேன் சென்டரையும் நடத்தி வருகிறார்.
அதனால், மனுதாரர் தன்னுடைய மகனுக்கு மகனுக்கு பணம் வழங்க வேண்டும், ஆனால், வசதியுள்ள மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை" என்று உத்தரவு பிறப்பித்திருந்தது நினைவிருக்கலாம்.
சேர்ந்து வாங்கிய சொத்து
இந்நிலையில், டெல்லியில் மற்றொரு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.. அதாவது மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த தம்பதி இருவரும், கடந்த 2005ம் ஆண்டு ஒன்றாக சேர்ந்து மும்பையில் வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள்.. ஆனால், அடுத்த ஆண்டே அதாவது 2006ல் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது.. இதனால் தம்பதி இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்..
மேலும், கணவர், விவாகரத்து கோரி கோர்ட்டுக்கும் சென்றார்.. இந்த வழக்கின் விசாரணை தற்போதும் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனிடையே, தம்பதி இருவரும் சேர்ந்து வாங்கிய வீட்டிற்கு தானே உரிமையாளர் என்று கணவர் கோரியதாக தெரிகிறது... உடனே இதை எதிர்த்து மனைவி சார்பில் டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனைவியின் சொத்து
அந்த மனுவில், "வீடு வாங்குவதற்கான பாதி தொகை என்னுடையது.. எனக்கு சீதனமாக கொண்டு வந்த பணத்தைதான் கணவருக்கு வழங்கினேன்... எனவே , அந்த வீட்டின் மீது எனக்கும் பாதி பங்கு இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்..
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், "கணவன் - மனைவி என இருவரும் சேர்ந்து ஒரு சொத்தை வாங்கி, அதை இருவரின் பெயரில் பதிவு செய்திருந்தால், அந்த சொத்தின் மீது கணவன் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது.
பினாமி சொத்து பரிவர்த்தனை
அப்படி உரிமை கொண்டாடுவது, பினாமி சொத்து பரிவர்த்தனைகள் சட்டத்திற்கு எதிரானது. வாங்கிய வீட்டிற்கு மாத தவணை செலுத்தி வந்த காரணத்தை சொல்லி, கணவர் மட்டுமே அந்த சொத்துக்கு ஏக போகமாக உரிமை கொண்டாடவும் முடியாது" என்று அதிரடியாக தீர்ப்பு தந்துள்ளது..
மனைவியுடன் சேர்ந்து வாங்கிய சொத்தில், கணவர் தனி உரிமை கோர முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள இந்த உத்தரவானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications