6 வருஷம் கழிச்சு கூட்டிட்டு வந்தேன்.. அவ உடம்பெல்லாம்.. அதான் கொன்னுட்டேன்.. கணவரின் வாக்குமூலம்

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அவளை பிரிந்து 6 வருஷம் இருந்தேன்.. 15 நாளுக்கு முன்னாடிதான் சமாதானம் செய்து கூட்டிட்டு வந்தேன்.. அப்பதான் உடம்பில் இருந்த டாட்டூவை பார்த்தேன்" என்று கழுத்தை அறுத்து மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம் தந்துள்ளார்.

புழல் பகுதியில் வசித்து வருபவர் வெற்றிவீரன். பாடியில் ஒரு தனியார் அச்சகத்தில் வேலை பார்க்கிறார்.. இவருக்கு சஜினி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

சஜினிக்கு 38 வயதாகிறது... சஜினி ஒரு பியூட்டிஷன்... இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வரும் என்கிறார்கள்.. சம்பவத்தன்றுகூட, சண்டை நடந்துள்ளது.. அப்போது மகள்கள் உறவினர் வீட்டில் தங்கி இருந்ருதள்ளனர்.. விடிய விடிய ராத்திரியெல்லாம் தம்பதி சண்டை போட்டுள்ளனர்.. பிறகு விடிகாலை 5 மணிக்கு பிறகு, கிச்சனில் இருந்து கத்தியை எடுத்து வந்து சஜினியை தாறுமாறாக குத்தினார் வெற்றிவீரன்.

புழல்

புழல்

சஜினியின் கழுத்து, வயிறு, மார்பில் பலமுறை குத்தி கிழித்தார்.. இதில் சஜினி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து கதறிய வெற்றிவீரன் நேராக புழல் போலீசில் போய் சரண் அடைந்தார். இதைக் கேட்டு அதிர்ந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர்.. பக்கத்திலேயே கிடந்த ரத்தக்கறை படிந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இதை பற்றி வெற்றிவீரன் தந்த வாக்குமூலத்தில்: சஜினி கேரளாவை சேர்ந்தவர்.. பார்க்க அழகா இருப்பார்.. ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.. அவளுடைய பியூட்டிஷன் வேலை எனக்கு பிடிக்கவில்லை.. நிறைய சண்டை வந்தது.. இதனால் கோபித்து கொண்டு சஜினி கோயம்புத்தூர் போய்விட்டாள்.. அங்கு 6 வருடமாக தனியாகத்தான் இருந்தாள்.

எதிர்காலம்

எதிர்காலம்

15 நாளைக்கு முன்புதான் சஜினியை நான் நேரில் சென்று பார்த்து சமாதானம் செய்தேன்.. "இனிமேல் சண்டை போட மாட்டேன்.. நம்ம பொண்ணுங்களோட எதிர்காலம்தான் முக்கியம்.. அவங்களுக்காக நாம ஒன்னா வாழலாம் வா" என்று சொன்னேன்.. சஜினியும் குடும்பம் நடத்த வந்தாள்.

டாட்டூ

டாட்டூ

புழல் பகுதியிலேயே ஒரு வீட்டை பார்த்து குடியேறினோம்.. அப்போதான் அவன் உடம்பில் டாட்டூவை பார்த்தேன்.. "டாட்டூ ஏன் குத்தினாய்.. இதற்கு அர்த்தம் என்ன? உடம்பு பூரா எதுக்கு டாட்டூ குத்தினே?" என்று கேட்டேன்.. விடிய விடிய சண்டை நடந்தது.. என்னால் சஜினி சொல்லும் காரணத்தை ஏற்கவே முடியவில்லை.. நான் சொல்வதையும் சஜினி கேட்பதாக இல்லை.. அந்த ஆத்திரத்தில்தான் கத்தி எடுத்து குத்தி கொன்றேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+