வீடியோ கால்.. மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டே.. கொடூர கணவன் கைது.. சென்னையில் ஷாக்

மனைவியை கொன்ற கணவனிடம் சென்னை போலீசார் விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டே, பல பெண்களுடன் வீடியோ காலில் பேசி வந்திருக்கிறார் கணவன்.. இதெல்லாம் தெரிந்து மனைவி கேள்வி கேட்கவும், அவரையே கழுத்தை நெரித்து கொன்றும் விட்டார் அந்த கணவன்.. இந்த சம்பவம் தமிழகத்தின் தலைநகரில் நடந்துள்ளது.

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்.. மனைவி பெயர் ஹேமாவதி.. கடந்த 2015-ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது.. 5 வயதில் ஒரு பெண் குழந்தை இவர்களுக்கு இருக்கிறார்.

ஆனால், திருமணம் நடந்து 6 மாதங்கள்தான் இவர்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள்.. அதற்குள் பிரச்சனை வெடித்துள்ளது.. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிக்குள் நிறைய தகராறு வந்து போயுள்ளது.

 சமாதானம்

சமாதானம்

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, இவர்களின் சண்டை அதிகமாகி, போலீஸ் ஸ்டேஷன் வரை விஷயம் சென்றுள்ளது.. பிறகு, இரு தரப்பையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்... இந்நிலையில், ஒருநாள் வினோத்தின் செல்போனில் நிறைய போட்டோக்கள் இருப்பதை பார்த்துள்ளார் ஹேமாவதி... எல்லாமே பெண்களின் போட்டோக்கள்.. அதில் பல பெண்களுடன் வினோத்தும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளதும் இருந்துள்ளது.. இதை பற்றி வினோத்திடம் கேட்டுள்ளார் ஹேமாவதி.

 ஹேமாவதி

ஹேமாவதி

இதுவே தகராறாகவும் மறுபடியும் இவர்களுக்குள் வெடித்துள்ளது.. ஆனாலும் வினோத் தன் போக்கை மாற்றி கொள்ளவில்லை.. மனைவிக்கு விஷயம் தெரிந்து விட்டதால், இப்போது அதே தவறை பகிரங்கமாகவே செய்ய ஆரம்பித்தார்.. ஹேமாவதியை பக்கத்தில் வைத்துக்கொண்டே, அந்த பெண்களுடன் வீடியோ காலில் பேசி வந்திருக்கிறார் வினோத்.. அதுவும் அரை நிர்வாணத்துடன்தான் வீடியோ கால் பேசுவாராம்.

 கொலை

கொலை

இதையெல்லாம் பார்த்து கொந்தளித்து போயுள்ளார் ஹேமாவதி.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்து போய், தட்டி கேட்டு தகராறு செய்திருக்கிறார்.. இதனால் ஆத்திரமடைந்த வினோத், ஹேமாவதி கழுத்து நெரித்து கொன்றுவிட்டார்.. பிறகு மாமியார் வீட்டுக்கு போன் செய்து, ஹேமாவதி வழுக்கி விழுந்துவிட்டதால், பேச்சு மூச்சு இல்லை என்று சொல்லி உள்ளார்.. இதைக் கேட்டு பதறிபோன ஹேமாவதி அண்ணன், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்துள்ளார்..

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி உள்ளனர். இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து, ஹேமாவதி குடும்பத்தினர் போலீசில் புகார் தந்துள்ளனர்.. வரதட்சணை கொடுமை முதல் பல பெண்களுடன் வினோத்துக்கு தொடர்பு இருந்தது வரை புகாரில் தெரிவித்துள்ளனர்.. அத்துடன் தங்கள் மகளை கொன்றுவிட்ட வினோத் மீதும் நடவடிக்கை கேட்டுள்ளனர்.. இது தொடர்பான விசாரணை ஒருபக்கம் நடந்து வந்தாலும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், இந்த மரணத்தின் உண்மைதன்மை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+