இந்த 2 மேட்டர்.. எடப்பாடியை புகழ்ந்து தள்ளிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. ஈபிஎஸ் சிரிப்பை பார்க்கணுமே!
சென்னை : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார்.
முன்னர் திமுக ஆதரவாளராக அறியப்பட்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வெகுவாகப் பாராட்டித் தள்ளியுள்ளார்.
ஒரு சாமானியர், முதலமைச்சர் இருக்கையை அலங்கரித்தார் என்றும், எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் சிரித்தபடியே கையாண்டார் என்றும் ஈபிஎஸ்ஸை புகழ்ந்து தள்ளினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

எடப்பாடி - எஸ்.ஏ.சி
எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. இந்த தொண்டு நிறுவனத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னைப் புகழ்ந்து பேசப் பேச எடப்பாடி பழனிசாமி, சிரித்தபடியே மகிழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நானும் சந்தேகப்பட்டேன்
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர், "எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற போது நானே அவரை பல இடங்களில், பல பேட்டிகளில் விமர்சித்தேன். திடீரென ஒருவர் முதலமைச்சர் சீட்டில் வந்து அமர்கிறாரே.. தமிழ்நாடு என்ற பெரிய மாநிலத்தை ஆளவேண்டும், அதேநேரத்தில் கட்சியை கட்டிக்காக்க வேண்டும், இவ்வளவு பெரிய பொறுப்பை இவர் எப்படி செய்வார் என சந்தேகப்பட்டது உண்மை.

வரலாற்றில் முதல் முறையாக
ஆனால், 2 விஷயங்களில் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். கடந்த கால அரசியல் வரலாற்றில் ஒரு சாமானியன், விவசாய குடும்பத்தில் பிறந்தவர் முதல் முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்ந்ததையே முதலில் பாராட்ட வேண்டும். நான் அரசியல் மேடைகளில் பேசுவதில்லையே தவிர அரசியலை உற்று நோக்கி வருகிறேன். அப்படி பார்க்கும்போது அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக 3 மாதங்களுக்கு ஒரு வளர்ச்சியைக் காட்டினார்.

ஆச்சர்யப்பட்ட விஷயம்
தான் ஒரு சிறந்த நிர்வாகி என ஒரே வருடத்தில் நிரூபித்து காட்டினார். பரம்பரை பரம்பரையாக பதவியில் இருப்பவர்களுக்கு அது சாதாரணம். அப்பா அப்படி இருந்தார், நாம் இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லாமல் திடீரென்று அந்த சீட்டில் அமர்ந்த பிறகு எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டினார் எடப்பாடி பழனிசாமி. நான் அவரிடம் ஆச்சர்யப்பட்ட இன்னொரு விஷயம் அவரது எளிமை.

எளிமை
நான் ஒரே ஒரு முறை தான் அவரை வீட்டில் சென்று சந்தித்தேன். ஒரு சி.எம்மை பார்க்க போகிறோம் என்று நினைத்து உள்ளே சென்றோம். ஆனால், உள்ளே போனபிறகு ஒரு சாதாரண மனிதரோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற அந்த உணர்வைத் தான் அவர் எனக்குக் கொடுத்தார். அதை நிச்சயமாக பாராட்ட வேண்டும். உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும்.

அந்த சிரிப்பு இருக்கே
மேலும், நான் அவரிடம் ரசிக்கும் இன்னொரு விஷயம். எவ்வளவு இக்கட்டான நிலைமையிலும் கூட அவரிடம் ஒரு சிரிப்பு இருக்கும் பாருங்க.. சாதாரண மனிதர்களுக்கே பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் வரும். ஒரு குடும்பத்தில் ஒரு மனைவி, பிள்ளை இருப்பவர்களுக்கே பெரிய பிரச்சனைகள் வருகிறது. ஆனால் சி.எம் சீட்டில் அமர்ந்துகொண்டு தனக்கு நேரும் பிரச்சனைகளை எல்லாம் சிரித்தபடியே சமாளித்துள்ளார்" எனப் பேசினார்.

எல்லோருக்கும் கிடைக்காது
அதன் பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அரசியலும் திரைப்படமும் ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்கிறது. திரைப்பட இயக்குநர் சந்திரசேகர், சாமானியன் ஒருவன் முதலமைச்சராக வருவது அவ்வளவு எளிதல்ல எனக் குறிப்பிட்டார். உண்மையிலேயே அது அப்படித்தான். திரையுலகிற்கு வருவது மிகக் கடினம். அது போல் தான் அரசியலும். திரைப்படத்திலும் அரசியலிலும் முத்திரை பதிப்பது அவ்வளவு எளிதல்ல. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

முட்கள் நிறைந்த பாதை
திரைத்துறையில் இயக்குநர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறுகிறார்கள், ஆனால் அரசியலில் அப்படி இல்லை. அரசியல் கடுமையான முட்கள் நிறைந்த பாதை. தெருவில் நின்று, ஒவ்வொரு படியாக ஏறித்தான் இந்த இடத்திற்கு வர முடியும். 34 வயதிலேயே சட்டமன்றத்தில் இருந்தவன் நான். எனது தொகுதியில் உள்ள அனைவருக்கும் அப்போதே என்னைத் தெரியும். அரசியல் பயணம் என்பது முள்ளும், பள்ளமும் நிறைந்த பாதை" எனப் பேசினார்.
-
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா!












Click it and Unblock the Notifications